Published : 20 Aug 2018 08:52 AM
Last Updated : 20 Aug 2018 08:52 AM

கேரள மக்களுக்கு வங்கிக் கட்டணங்களில் விலக்கு: எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கிகள் அறிவிப்பு

வெள்ளத்தால் கடுமையான பாதிப்பினை சந்தித்துள்ள கேரள மக்களுக்கு வங்கிக் பரிவர்த் தனைக் கட்டணங்களில் இருந்து விலக்கு அளிப்பதாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), ஐசிஐசிஐ வங்கி ஆகியவை அறிவித்துள்ளன.

இது தொடர்பாக இந்த வங்கி கள் வெளியிட்டுள்ள அறிக்கை யில், பாதிக்கப்பட்டுள்ள மக்க ளுக்கு வங்கியின் பல்வேறு சேவை களுக்கான கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று குறிப் பிட்டுள்ளன. முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.2 கோடியை எஸ்பிஐ அளித்துள்ளது. இது தவிர தனது 2.7 லட்சம் ஊழியர்களையும் கேரள மக்களுக் கான உதவிகளை செய்யுமாறு கேட்டுள்ளது. தவிர தற்போது வங்கி பரிவர்த்தனைகளுக்கான கட்டணத் தையும் தள்ளுபடி செய்ய முன் வந்துள்ளது.

வெள்ள சேதத்திலிருந்து மீள்வ தற்கான கடன் உதவிகள், பாஸ் புக் நகல், ஏடிஎம் கார்டு, செக் புக் போன்றவற்றுக்கான பரிவர்த்தனை கட்டணங்களை நீக்கியுள்ளது.

நெப்ட் மற்றும் ஆர்டிஜிஎஸ் பண பரிமாற்றங்களுக்கான கட்டணங் கள், இஎம்ஐ தாமதக் கட்டணத் தையும் தள்ளுபடி செய்துள்ளது.

குறைந்தபட்ச இருப்பு இல்லை யெனில் அதற்கான அபராதமும் நீக்கப்படுகிறது. ஒருவேளை கட்ட ணம் பிடிக்கப்பட்டிருந்தால் திருப்பி அளிக்கவும் முடிவு செய்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கி ரூ.10 கோடி நிதி உதவி செய்துள்ளது. இதுதவிர ஆகஸ்ட் மாத சில்லரை கடன் இஎம்ஐ தாமதமானால் அதற்கு விதிக்கப்படும் அபராதத்தினை நீக்கிக் கொள்ளவும் முடிவு செய்துள் ளது. அதுபோல கிரெடிட் கார்டு நிலுவைகளுக்கு அபராதம் விதிக் கப்படாது என்றும் அறிவித்துள்ளது. இந்த மாதத்தில் செக் பவுன்ஸ் ஆனால் அதற்கான அபராதமும் விதிக்கப்படாது.

தவிர அமேசான், பேடிஎம் போன்ற நிறுவனங்களும் நிதிச் சேவை உதவிகளுக்கு கை கோர்த்துள்ளன. பேடிஎம் நிறு வனம் தங்களது செயலி வழியாக நன்கொடை வழங்க வசதி உருவாக்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x