பஜாஜின் புதிய டிஸ்கவர் டுவின்ஸ்

பஜாஜின் புதிய டிஸ்கவர் டுவின்ஸ்
Updated on
1 min read

இரு சக்கர வாகனத் தயாரிப்பில் முன்னணியில் உள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனம் முற்றிலும் புதுமையான 2 மோட்டார் சைக்கிள்களை டிஸ்கவர் பிராண்ட் பெயரில் டிஸ்கவர் 150 எப் மற்றும் டிஸ்கவர் 150 எஸ் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இவ்விரண்டு மோட்டார் சைக்கிளும் ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள மோட்டார் சைக்கிளை விட வித்தியாசமானது. வாடிக்கையாளர்களுக்கு புதுமையான, மகிழ்ச்சியான பயண அனுபவத்தை அளிக்கக் கூடியது என்று அறிமுக நிகழ்ச்சியில் பேசிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜிவ் பஜாஜ் தெரிவித்தார்.

2004-ம் ஆண்டு டிஸ்கவர் மோட்டார் சைக்கிள் அறிமுகப் படுத்தப்பட்டதிலிருந்து, இந்த பிராண்ட் மிகவும் பிரபலமாகத் திகழ்கிறது. மிகச் சிறந்த வடிவமைப்பு, செயல்பாடு ஆகியவை காரணமாக இது தனித்து நிற்கிறது.

இப்போது அறிமுகமாகும் டிஸ்கவர் 150 எப் மோட்டார் சைக்கிள் முறையில் மிகச் சிறந்த பயண அனுபவத்தை அளிக்கக் கூடியது.தினசரி வழக்கமான மோட்டார் சவாரியிலிருந்து மாறுபட்ட பயண அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதில் உள்ள மேம்பட்ட 4 வால்வ் 150 சிசி டிடிஎஸ்-ஐ என்ஜின் 14.5 பிஎஸ் சக்தியை அளிக்கும். அத்துடன் சிவிஎம்ஆர் இருப்பதால் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 72 கி.மீ.தூரம் ஓடக் கூடியது. மோட்டார் சைக்கிள் பயணத்தில் அதிக நேரம் செலவிடுவோருக்கு மிகச் சிறந்த வாகனமாக இது அமையும் என்று குறிப்பிட்டார்.டிஸ்கவர் 150 எப் சென்னையில் விற்பனையக விலை ரூ. 60,680 ஆகும். டிஸ்கவர் 150 எஸ் விற்பனையக விலை ரூ. 53,554 ஆகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in