டெய்ம்லர் இந்தியா நிறு​வனத்​தின் புது எம்.டி.டார்ஸ்டன்

டார்​ஸ்​டன் ஸ்​மித்
டார்​ஸ்​டன் ஸ்​மித்
Updated on
1 min read

சென்னை: சென்​னையை தலை​மையக​மாக கொண்டு செயல்​படும் டெய்ம்​லர் இந்​தியா வர்த்தக வாகன நிறு​வனத்​தின் புதிய நிர்​வாக இயக்​குநர் (எம்.டி.) மற்​றும் தலை​மைச் செயல் அதி​காரி​யாக (சிஇஓ) டார்​ஸ்​டன் ஸ்​மித் (53) நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

இப்போது தலைமை நிதி அதி​காரி​யாக உள்ள இவர், 2026-ல் தொடக்​கத்​தில் புதிய பொறுப்பை ஏற்க உள்​ளார். உலகின் மிகப்​பெரிய வர்த்தக வாகன நிறு​வன​மான டெய்ம்​லரில் சுமார் ஒரு லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் பணி​யாற்றி வரு​கின்​றனர். கடந்த 1997-ம் ஆண்​டில் டெய்ம்​லர் டிரக் நிறு​வனத்​தில் டார்​ஸ்​டன் ஸ்மித் இணைந்​தார். கடந்த 28 ஆண்​டு​களாக பல்​வேறு பதவிகளை வகித்துள்​ளார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in