ஒரே நாளில் ரூ.3,000 சரிந்த தங்கம் விலை - ஒரு பவுன் ரூ.88,600-க்கு விற்பனை!

படம்: மெட்டா ஏஐ
படம்: மெட்டா ஏஐ
Updated on
1 min read

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.3,000 குறைந்து, ரூ.88,600-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், தீபாவளிக்கு பிறகு தங்கம் விலை படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. அதன்படி சென்னையில் இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் ரூ.11,300-க்கும், பவுனுக்கு ரூ.1,200 குறைந்து ஒரு பவுன் ரூ.90,400-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், சென்னையில் இன்று மாலை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு மேலும் ரூ.1,800 குறைந்து ரூ.88,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.225 குறைந்து ரூ.11.075-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.3,000 சரிந்துள்ளது மக்களுக்கு சற்று ஆறுதலை வழங்கியுள்ளது. அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.165-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,65,000-க்கும் விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சற்றே மீளத் தொடங்கி இருப்பதுடன், சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடும் குறைந்து வருகிறது. இதனால், தங்கத்தின் தேவை குறைந்து ஆபரணத் தங்கம் விலையும் வீழ்ச்சி கண்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in