வேகமான வளர்ச்சியை சந்திக்கும் பெங்களூரு விமான நிலையம்: உலக அளவில் இரண்டாவது இடம்

வேகமான வளர்ச்சியை சந்திக்கும் பெங்களூரு விமான நிலையம்: உலக அளவில் இரண்டாவது இடம்
Updated on
1 min read

உலக அளவில் வேகமான வளர்ச்சியை சந்திக்கும் விமான நிலையங்களில் பெங்களூரு இரண்டாவது இடத்தில் உள்ளது. உலக அளவிலான பட்டியலில் பயணிகளைக் கையாளுவதில் வேகமான வளர்ச்சியை எட்டும் முதல் 10 விமான நிலையங்களில் பெங்களூரு, புதுடெல்லி இடம்பெற்றுள்ளன.

இது தொடர்பாக வெளிவந் துள்ள தகவல்களில், பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம் பயணிகளை கையாளு வதில் அதிவேக வளர்ச்சி கண்டு வருகிறது. 2018-ம் ஆண்டில் முதல் பாதி புள்ளிவிவரங்கள்படி 1,58,50,352 பயணிகளை இந்த விமான நிலையம் கையாண்டுள் ளது.

கடந்த ஆண்டின் இதே காலத்தில் 41,80,852 பயணிகளை கையாண்டிருந்தது.

ரூட்ஸ் ஆன்லைன் என்கிற நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

சர்வதேச அளவிலான தரம் மற்றும் உலக அளவிலான பயணங் களின் வளர்ச்சி அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது. முதல் ஆறு மாதங் களில் 25 லட்சம் பயணிகளை கையாண்ட விமான நிலையங்கள் மட்டும் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

டோக்கியோவின் ஹெனேடா விமான நிலையம் முதலிடத்தில் உள்ளது. இந்த விமான நிலையம் 4,32,88,588 பயணிகளை கை யாண்டுள்ளது.

கடந்த ஆண்டில் 43,44,307 பயணிகள் இந்த விமான நிலை யம் கையாண்டுள்ளது. -பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in