தங்கம் ஒரு பவுன் ரூ.97,000 தாண்டியது

தங்கம் ஒரு பவுன் ரூ.97,000 தாண்டியது
Updated on
1 min read

சென்னை: சென்​னை​யில் தங்​கம் விலை நேற்று ரூ.97 ஆயிரத்தை தாண்​டி, மீண்​டும் வரலாறு காணாத புதிய உச்​சத்தை தொட்​டது.

எச்​1பி விசா கட்​ட​ணத்தை அமெரிக்க அரசு உயர்த்​தி​யது, அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாய் மதிப்பு வீழ்ச்​சி, வட்டி விகிதத்தை அமெரிக்க ஃபெடரல் வங்கி குறைத்​தது, முதலீட்​டாளர்​களின் பார்வை தங்​கத்​தின் பக்​கம் திரும்​பியது உள்​ளிட்ட காரணங்​களால் தங்​கம் விலை தொடர்ந்து உயர்ந்​து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது. 22 காரட் தங்கம் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11,900, ஒரு பவுன் ரூ.95,200-க்கு விற்கப்பட்ட நிலையில், நேற்று கிராமுக்கு ரூ.300 என பவுனுக்கு ரூ.2,400 உயர்ந்தது. இதனால், நேற்று ஒரு கிராம் ரூ.12,200, ஒரு பவுன் ரூ.97,600 என உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது.

விரைவில் ஒரு பவுன் தங்கம் ரூ.1 லட்சத்தை தொடும் என்று நகை வியாபாரிகள் தெரிவித்தனர். 24 காரட் தங்கம் விலை நேற்று ரூ.1,06,472 ஆக இருந்தது. நேற்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.203 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.3,000 குறைந்து, ரூ.2,03,000 ஆகவும் இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in