ஆந்திராவில் ரூ.87,570 கோடி முதலீட்டில் கூகுள் டேட்டா சென்டர் அமைகிறது: டெல்லியில் இன்று ஒப்பந்தம் கையெழுத்து

ஆந்திராவில் ரூ.87,570 கோடி முதலீட்டில் கூகுள் டேட்டா சென்டர் அமைகிறது: டெல்லியில் இன்று ஒப்பந்தம் கையெழுத்து
Updated on
1 min read

வி​சாகப்​பட்​டினம்: ஆந்​திர மாநிலம், விசாகப்​பட்​டினத்​தில் பிரபல கூகுள் நிறு​வனம் ரூ.87,570 கோடி செல​வில் டேட்டா சென்​டரை அமைக்க உள்​ளது. இதற்​காக டெல்​லி​யில் இன்று ஆந்​திர அரசு மற்​றும் மத்​திய அரசுடன் ஒப்​பந்​தம் கையெழுத்​தாகிறது.

விசாகப்​பட்​டினத்​தில் கூகுள் நிறு​வனம் 1 ஜிகா வாட் திறன் கொண்ட மிகப்​பெரிய டேட்டா சென்​டரை அமைக்க உள்​ளது. ரூ.10 லட்​சம் பில்​லியன் அமெரிக்க டாலர்​கள் (இந்​திய மதிப்​பில் ரூ.87,570 கோடி) மதிப்​பீட்​டில் இந்த டேட்டா சென்​டர் அமைய உள்​ளது. ஆதலால் இது நாட்​டின் மிகப்​பெரிய நேரடி வெளி​நாட்டு முதலீ​டாக கருதப்​படு​கிறது. இதற்​காக நேற்று மாலை ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு, ஐடி துறை அமைச்​சர் நாரா லோகேஷ் மற்​றும் ஆந்​திர அரசின் உயர் அதி​காரி​கள் ஆகியோர் டெல்​லிக்கு சென்​றனர்.

பின்​னர், பிரதமர் நரேந்​திர மோடியை இக்​குழு சந்​தித்​தது. அப்​போது, முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு, பிரதமருக்கு பூங்​கொத்து கொடுத்​து, பொன்​னாடை போர்த்​தி, கூகுள் நிறு​வனம் ஆந்​தி​ரா​விற்கு வரு​வதற்​கான நடவடிக்​கைகளை மேற்​கொண்​டதற்​காக தனது நன்​றியை தெரி​வித்​தார்.

மேலும், வரும் நவம்​பர் மாதம் 14, 15 ஆகிய தேதி​களில் 2 நாட்​கள் நடை​பெற உள்ள முதலீட்​டாளர் மாநாடுக்​கும் பிரதமர் நரேந்​திர மோடி வர வேண்​டுமென அழைப்பு விடுத்​தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in