தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 உயர்வு; வெள்ளி விலையும் ஏற்றம்!

தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 உயர்வு; வெள்ளி விலையும் ஏற்றம்!
Updated on
1 min read

சென்னை: தங்கம் விலை இன்று (அக்.9) பவுனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் இன்று ஏற்றம் கண்டுள்ளது.

சர்​வ​தேச பொருளா​தார நில​வரத்​துக்கு ஏற்ப தங்​கம் விலை​யில் ஏற்​ற​மும், இறக்​க​மும் இருந்து வரு​கிறது. இதன் அடிப்​படை​யில், செப்​.6-ம் தேதி ரூ.80,040 ஆக இருந்த ஒரு பவுன் ஆபரணத் தங்​கம், செப்​.23-ம் தேதி ரூ.85,120 ஆக உயர்ந்​தது.

எச்​1பி விசா கட்​ட​ணத்தை அமெரிக்க அரசு உயர்த்​தி​யது. அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை தங்​கம் விலை உயர்​வுக்கு முக்கியக் காரண​மாக அமைந்​தது. அமெரிக்கா வட்டி விகிதங்களைக் குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதுவும் தங்கம் விலை உயர ஒரு காரணம்.

இதன்​பிறகு, ஓரிரு நாட்​கள் இறக்​க​மாக​வும், பெரும்​பாலான நாட்​கள் ஏற்​ற​மாக​வும் இருந்து வந்த நிலை​யில், அக்.6 பவுன் தங்​கம் ரூ.89 ஆயிரத்தை தொட்​டது. இதன் தொடர்ச்​சி​யாக, ஆபரணத் தங்​கத்​தின் விலை அக்.7 பவுனுக்கு ரூ.600 உயர்ந்​து, ரூ.89,600-க்கு விற்பனை செய்​யப்​பட்​டது.

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (அக்.8) ஒரே நாளில் காலையில் பவுனுக்கு ரூ.800-ம், மாலையில் ரூ.680-ம் உயர்ந்த வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்தது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,480 உயர்ந்து, பவுன் ரூ.91,080-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று (அக்.9) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,400-க்கும், பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு பவுன் ரூ.91,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் 171 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,71,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in