

எப்பவுமே எனக்குப் பிடித்த கார் ஜாகுவார் என்கிறார் சிவகார்த்திகேயன். சின்ன வயதில் சர்க்கஸ் பார்க்கப் போகும்போது கூடாரத்திற்குள் சிறுத்தை சாகசம் செய்ய வரும். அந்த ஒரு நிமிடம் சர்க்கஸ் கூடார விளக்குகளை அணைப்பார்கள்.
இருண்ட இடத்தில் கம்பீரமாக நடந்து வரும் கருஞ்சிறுத்தையின் கண்களை பார்க்கும்போது பளிங்கு போல மிளிரும் காட்சி ஒரு விநாடி நம் உடலை சிலிர்க்க வைக்கும். அப்படித்தான் தூரத்தில் ஒரு ஜாகுவார் கார் வரும்போது அதன் முகப்பில் கம்பீரத்தோடு எதிரொளிபட்டு நின்று கொண்டிருக்கும் சில்வர் நிற சிறுத்தை லோகோவைப் பார்க்கும்போது உள்ளுக்குள் ஒருவித நெகிழ்ச்சியைத் தூண்டும்.
அவ்வளவு நீளமான காரில் உட்புறம் அமர்ந்து பயணிக்கும் போதோ, காரை ஓட்டிச்செல்லும் போதோ ஒரு மென்மையான உணர்வை மட்டுமே உணர முடிகிறது. இப்போது என்னிடம் ஆடி – கியூ5 கார் உள்ளது. முதன்
முதலாக நான் ஓட்டக் கற்றுக் கொண்ட கார் இந்தியாவின் அடையாளமாகக் கருதப்பட்ட அம்பாசிடர்தான். இப்போ இந்த காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டதும் ஒரு வருத்தம்தான். இப்படி காரைப்பற்றி யோசிக்கும்போது பல நினைவுகள் கண் முன் நிற்கிறது.
இருந்தாலும் எல்லாவற்றையும் கடந்து யோசிக்கும்போது ஜாகுவாரும், அந்த காரின் முகப்பில் உள்ள சிறுத்தையின் கண்களும் என்னை பிரமிக்க வைக்கிறது.