வங்கிக் கடன் மோசடி வழக்கு: அமலாக்கத் துறை விசாரணைக்கு அனில் அம்பானி ஆஜர்

வங்கிக் கடன் மோசடி வழக்கு: அமலாக்கத் துறை விசாரணைக்கு அனில் அம்பானி ஆஜர்
Updated on
1 min read

புதுடெல்லி: பல ஆயிரம் வங்கிக் கடன் மோசடி வழக்கில் அமலாக்கத் துறை சம்மனை அடுத்து இன்று (ஆக.5) அனில் அம்பானி விசாரணைக்கு ஆஜரானார்.

66 வயதான அவர், டெல்லியில் உள்ள அமலாக்கத் துறையில் விசாரணைக்காக ஆஜரானார். இந்த வழக்கில் அவரது வாக்குமூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் பதிவு செய்யப்படும் என தகவல் கிடைத்துள்ளது. அமலாக்கத் துறையின் துணை மற்றும் இணை இயக்குனர்களின் மேற்பார்வையில் உதவி இயக்குனர் பொறுப்பில் உள்ள அதிகாரி, அனில் அம்பானியிடம் விசாரணை மேற்கொள்வதாக தகவல் கிடைத்துள்ளது.

வழக்கின் பின்னணி: லஞ்சம், பிணையற்ற கடன் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், யெஸ் வங்கியில் வாங்கிய ரூ.3,000 கோடி கடனை தொழிலதிபர் அனில் அம்பானி சட்டவிரோதமாக மடைமாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமையகத்தில் இன்று அனில் அம்பானி நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க சம்மன் பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த விவ​காரத்​தில் கடந்த 2024 நவம்​பர் 11-ல், டெல்லி காவல் ​துறை​யின் பொருளா​தார குற்​றப்​பிரிவு பதிவு செய்த வழக்​கின் அடிப்​படை​யில் தற்​போது அமலாக்​கத் துறை​யும் வழக்கு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்​து விசா​ரணை​யில் இறங்​கி​யுள்​ள​தாக அதி​காரி​கள் தெரி​வித்​து உள்​ளனர். அனில் அம்​பானி குழு​மத்​தின் பல நிறு​வனங்​கள் ரூ.10,000 கோடிக்​கும் அதி​க​மான நிதி முறை​கேடு​களில் ஈடு​பட்​ட​தாக கூறப்​படு​கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in