புதிய பரஸ்பர நிதி திட்டம்: கோடக் மஹிந்திரா அறிமுகம்

புதிய பரஸ்பர நிதி திட்டம்: கோடக் மஹிந்திரா அறிமுகம்
Updated on
1 min read

சென்னை: கோடக் மஹிந்திரா சொத்து மேலாண்மை நிறுவனம், ஓபன் எண்டட் பரஸ்பர நிதி திட்டமான கோடக் ஆக்டிவ் மொமென்டம் பண்ட் அறிமுகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது சொந்தமாக உருவாக்கப்பட்ட மாதிரி அடிப்படையில் வருவாய் வேகத்துடன் கூடிய பங்குகளை அடையாளம் காண்பதன் மூலம் வாய்ப்புகளைப் பிடிக்க முயல்கிறது. இந்த புதிய திட்டத்தில் (என்எப்ஓ) இன்று முதல் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை முதலீடு செய்யலாம். என் எப்ஓ காலத்தில் குறைந்த பட்சம் ரூ.5,000 முதலீடு செய்ய வேண்டும். அதன் பிறகு சந்தையில் எவ்வளவு தொகை வேண்டுமானலும் முதலீடு செய்யலாம். எஸ்ஐபி முறையில் குறைந்தபட்சம் ரூ. 500 முதலீடு செய்யலாம்.

விலை உயரும் பங்குகள்: பொதுவாக மொமென்டம் முதலீடு என்பது விலை உயர வாய்ப்புள்ள பங்குகளை வாங்குவதாகும். இருப்பினும், மொமென்டம் விலை சார்ந்தது மட்டுமல்ல. வருவாய் மொமென்டம் என்பது வலுவான அடிப்படைக் காரணிகளால் ஆதரிக்கப்படும். மேல்நோக்கிய வருவாய் திருத்தங்கள் மற்றும் சாதகமான ஆய்வாளர் மதிப்பீடுகள் கொண்ட பங்குகளை மையமாகக் கொண்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in