Published : 01 Jul 2018 11:39 AM
Last Updated : 01 Jul 2018 11:39 AM

ஐடிபிஐ வங்கியில் முதலீடு செய்ய எல்ஐசிக்கு ஐஆர்டிஏ அனுமதி

புதுடெல்லி

ஐடிபிஐ வங்கியில் எல்ஐசி முதலீடு செய்வதற்கு காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏ) அனுமதி வழங்கி இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த வங்கியின் 51 சதவீத பங்குகளை எல்ஐசி வாங்க இருக்கிறது. மேலும் ரூ.10 ,௦௦௦  கோடி முதலீடு செய்ய இருக்கிறது. இந்த முதலீட்டினை முன்னுரிமை பங்குகள் மூலமாக எல்ஐசி முதலீடு செய்ய இருக்கிறது.

அதே சமயத்தில், இன்னும் ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் எல்ஐசி தன்னுடைய முதலீட்டை குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஐஆர்டிஏ அறிவுறுத்தி இருக்கிறது. வரும் காலத்தில் 15 சதவீத அளவுக்குள் குறைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. பங்குகளை குறைத்துக்கொள்வது குறித்த திட்டத்தினை, கால வரம்புடன் எல்ஐசி  தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஐஆர்டிஏ தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஐடிபிஐ வங்கியில், எல்ஐசி ஒரு முதலீட்டாளர் மட்டுமே. வங்கியின் நிர்வாகத்தில் எல்ஐசி தலையிடாது. அதே சமயத்தில் ஒன்று அல்லது இரண்டு இயக்குநர்களை எல்ஐசி நியமனம் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் இந்த முதலீட்டில் பல ஒழுங்குமுறை சிக்கல்களும் உள்ளன. ஐஆர்டிஏ அனுமதி வழங்கினாலும் செபி மற்றும் ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியாக வேண்டும்.

ஏற்கெனவே பல வங்கிகளில் எல்ஐசி முதலீடு செய்திருக்கிறது. இந்த நிலையில் ஐடிபிஐ வங்கியில் 51 சதவீத பங்குகளை வைத்திருப்பதற்கு ரிசர்வ் வங்கியின் அனுமதி தேவை. மேலும் எல்ஐசி மற்றும் ஐடிபிஐ வங்கி ஆகிய இரு நிறுவனங்களும் தனித்தனியாக மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களை நடத்தி வருகின்றன.  செபியின் விதிமுறைப்படி இது அனுமதிக் கப்படவில்லை. இது தவிர ஐடிபிஐ வங்கியின் கீழ், ஐடிபிஐ பெடரல் ஆயுள் காப்பீட்டு நிறுவனமும்  செயல்பட்டுவருகிறது. எல்ஐசியும் ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவனம் என்பதால் இங்கேயும் சிக்கல் வரலாம்.

இந்திய வங்கிகளின் சங்கத்தலைவர் விஜி கண்ணன் கூறும்போது, வங்கியை நடத்துவது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. எல்ஐசியின் நிர்வாகத்துக்கு வங்கியை நடந்துவது என்பது கடினமான செயலாக இருக்கும். அதனால் பெரும்பாலான பங்குகள் எல்ஐசி  வசம் இருக்க கூடாது என கூறினார்.தற்போது ஐடிபிஐ வங்கியில் 10.8 சதவீத பங்குகளை எல்.ஐ.சி. வைத்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு கார்ப்பரேஷன் வங்கியில் 28 சதவீத பங்குகளை எல்ஐசி வைத்திருந்தது. ஆனால் தற்போது 13 சதவீத அளவுக்கு மட்டுமே எல்ஐசி வைத்திருக்கிறது. மொத்தம் ஆறு பொதுத்துறை வங்கிகளில் 10 சதவீதத்துக்கு மேலான பங்குகளை எல்ஐசி வைத்திருக்கிறது.

தற்போதைய விதிமுறைகளின் படி, பட்டியலிடப்பட்ட நிறுவனங் களில் 15 சதவீதத்துக்கு மேலான பங்குகளை எந்த காப்பீட்டு நிறுவனங்களும் வைத்திருக்க முடியாது.

அனைத்திந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்திருக்கிறது. ஐடிபிஐ வங்கியில் 51  சதவீத பங்குகள் அரசு வசம் இருக்க வேண்டும். வங்கிக்கு தேவையான மூல தனத்தை அரசு வழங்க வேண்டும் என நிதி அமைச்சருக்கு ஊழியர் சங்கத்தலைவர் சி.ஹெச். வெங்கடாசலம் கடிதம் எழுதி இருக்கிறார்.ஐடிபிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீராம்

 மும்பை

ஐடிபிஐ வங்கியின் கூடுதல் நிர்வாக இயக்குநராக பி.ஸ்ரீராம் மூன்று மாதங்களுக்கு நியமனம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் முழுநேர நிர்வாக இயக்குநராக இவர் நியமனம் செய்யப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக இருந்து வருகிறது. இந்த பொறுப்பில் இருந்து விருப்ப ஒய்வு பெற்றுவிட்டார். இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.

ஐடிபிஐ வங்கியின் நிர்வாக இயக்குநராக இருந்த எம்.கே.ஜெயின் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக நியமனம் செய்யப்பட்டதை அடுத்து ஸ்ரீராமுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

ஐடிபிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீராம்

மும்பை

ஐடிபிஐ வங்கியின் கூடுதல் நிர்வாக இயக்குநராக பி.ஸ்ரீராம் மூன்று மாதங்களுக்கு நியமனம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் முழுநேர நிர்வாக இயக்குநராக இவர் நியமனம் செய்யப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக இருந்து வருகிறது. இந்த பொறுப்பில் இருந்து விருப்ப ஒய்வு பெற்றுவிட்டார். இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.

ஐடிபிஐ வங்கியின் நிர்வாக இயக்குநராக இருந்த எம்.கே.ஜெயின் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக நியமனம் செய்யப்பட்டதை அடுத்து ஸ்ரீராமுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x