Published : 04 Jul 2025 08:28 AM
Last Updated : 04 Jul 2025 08:28 AM

சீன பொறியாளர்கள் திரும்ப பெறப்பட்டதால் பாக்ஸ்கானில் ஐ-போன் உற்பத்தி பாதிப்பு

புதுடெல்லி: இந்திய ஐ-போன் தொழிற்சாலையில் பணியாற்றிய சுமார் 300 சீன பொறியாளர்களை பாக்ஸ்கான் நிறுவனம் திரும்ப பெற்றதால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன்களை சீனாவின் பாக்ஸ்கான் நிறுவனம் அசெம்பிள் செய்து வழங்குகிறது. அந்த வகையில் பாக்ஸ்கான் தொழிற்சாலை தமிழகத்தில் அமைந்துள்ளது. இதில் ஆயிரக்கணக்கானோர் பணிபுரிகின்றனர்.

இந்​நிலை​யில், தமிழக தொழிற்​சாலை​யில் பணி​யாற்​றிய 300-க்​கும் மேற்​பட்ட சீன பொறி​யாளர்​கள் மற்​றும் தொழில்​நுட்ப வல்​லுநர்​களை கடந்த 2 மாதங்​களுக்கு முன்பு பாக்​ஸ்​கான் நிறு​வனம் திரும்ப பெற்றுவிட்டதாக தகவல் வெளி​யாகி உள்​ளது. இதற்​கான காரணம் தெரிய​வில்​லை.

இதையடுத்​து, சீன பொறி​யாளர்​கள் பார்த்த வேலையை தைவானைச் சேர்ந்​தவர்​கள் கவனித்து வரு​வ​தாகக் கூறப்​படு​கிறது. ஐ-போன் 17 உற்​பத்தி செய்​யப்​பட்டு வரும் நிலை​யில், சீன பொறி​யாளர்​களை வீட்​டுக்கு அனுப்​பிய​தால் உற்​பத்தி பாதிக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும் தகவல் வெளி​யாகி உள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x