Published : 02 Jul 2025 06:55 AM
Last Updated : 02 Jul 2025 06:55 AM

உலகில் அதிவேகமாக வளர்கிறது இந்தியா: பொருளாதாரம் குறித்த சர்வதேச ஆய்வறிக்கையில் தகவல்

புதுடெல்லி: உல​கில் அதிவேக​மாக வளரும் பொருளா​தார நாடாக இந்​தியா நீடிக்​கும் என்று மார்​கன் ஸ்டான்​லி​யின் சர்​வ​தேச ஆய்​வறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது.

அமெரிக்​கா​வைச் சேர்ந்த மார்​கன் ஸ்டான்லி நிறுவனம் உலக நாடு​களின் பொருளா​தா​ரம் குறித்து வெளி​யிட்ட ஆய்​வறிக்கையில் கூறி​யிருப்​ப​தாவது: அமெரிக்​கா, ஐரோப்​பிய நாடு​கள், சீனா உள்​ளிட்​டவை தங்​களின் பொருளா​தார வளர்ச்​சியை அதி​கரிக்க அதிக தொகையை செல​விட்டு வரு​கின்​றன. ஆனால் சர்​வ​தேச பொருளா​தார வளர்ச்சி மந்​த​மாகவே இருக்​கிறது. கரோனா பெருந்​தொற்று காலத்​துக்கு பிறகு சர்​வ​தேச பொருளா​தா​ரம் முழு​மை​யாக மீட்சி அடைய​வில்​லை.

பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் பல்​வேறு நாடு​கள் மீது அமெரிக்க அரசு வர்த்தக வரி​களை விதித்​துள்​ளது. இதன்​காரண​மாக கடந்த ஏப்​ரலில் அமெரிக்​கா​வின் பொருளா​தா​ரம் பெரும் சரிவை சந்​தித்​தது. இது உலகம் முழு​வதும் பாதிப்​பு​களை ஏற்​படுத்​தி​யது. நடப்​பாண்​டில் அமெரிக்​கா​வின் பொருளா​தார வளர்ச்சி 1.5 சதவீத​மாக இருக்​கும்.

வரும் 2026-ம் ஆண்​டில் அந்த நாட்​டின் பொருளா​தார வளர்ச்சி ஒரு சதவீத​மாக இருக்​கும். நடப்​பாண்​டில் அமெரிக்​கா​வில் பண வீக்​கம் 3 சதவீதமாக உள்​ளது. சட்​ட​விரோத குடியேறிகளை அமெரிக்கா வலுக்​கட்​டாய​மாக வெளி​யேற்றி வரு​கிறது. இதன்​காரண​மாக அமெரிக்​கா​வில் தொழிலா​ளர்​களுக்கு பற்​றாக்​குறை ஏற்​படும். இது அந்த நாட்​டின் பொருளா​தார வளர்ச்​சியை மோசமாகப் பாதிக்​கும்.

ஐரோப்​பா​வின் பொருளா​தா​ரம் நடப்​பாண்​டில் ஒரு சதவீத​மாக இருக்​கும். ஐரோப்​பிய நாடு​களின் ஏற்​றுமதி கணிச​மாக பாதிக்​கப்​பட்​டிருப்​ப​தால் ஒட்​டுமொத்த ஐரோப்​பா​வின் பொருளா​தார வளர்ச்சி பாதிக்​கப்​பட்டு உள்​ளது. சீனா​வின் வீட்டு வசதித் துறை பெரும் சரிவை சந்​தித்து வரு​கிறது. இது அந்த நாட்​டின் பொருளா​தா​ரத்தை மிகக் கடுமை​யாக பாதித்து உள்​ளது. நடப்​பாண்​டில் சீனா​வின் பொருளா​தார வளர்ச்சி 4.5 சதவீத​மாக இருக்​கும். வரும் 2026-ம் ஆண்​டில் அந்த நாட்​டின் பொருளா​தார வளர்ச்சி 4.2 சதவீத​மாக குறை​யும்.

ஜப்​பானின் பொருளா​தார வளர்ச்சி நடப்​பாண்​டில் ஒரு சதவீத​மாக இருக்​கும். அடுத்த ஆண்​டில் அந்த நாட்​டின் பொருளா​தார வளர்ச்சி 0.5 சதவீத​மாக குறையக்​கூடும். லத்​தீன் அமெரிக்க நாடு​களின் பொருளா​தா​ரத்​தில் தொடர்ந்து மந்​தநிலை காணப்​படு​கிறது. குறிப்​பாக பிரேசில், மெக்​ஸிகோ நாடு​களின் வளர்ச்சி தடைபட்​டிருக்​கிறது. அமெரிக்​கா​வின் சில கொள்கை முடிவு​கள் லத்​தீன் அமெரிக்க நாடு​களின் பொருளா​தா​ரத்தை கடுமை​யாக பாதித்து உள்​ளன.

இந்​தி​யா​வின் ஏற்​றுமதி கணிச​மாக அதி​கரித்து வரு​கிறது. அந்த நாட்​டின் உள்​நாட்டு சந்தை அபரிமித​மாக வளர்ச்சி அடைந்து வரு​கிறது. இதன்​காரண​மாக உலகளா​விய அளவில் அதிவேக​மாக வளரும் பொருளா​தார நாடாக இந்​தியா நீடிக்​கும். நடப்​பாண்​டில் அந்த நாட்​டின் பொருளா​தார வளர்ச்சி 5.9 சதவீத​மாக இருக்​கும். வரும் 2026-ம் ஆண்​டின் இந்​தி​யா​வின் பொருளா​தார வளர்ச்சி 6.4 சதவீத​மாக அதி​கரிக்​கும். இவ்​வாறு ஆய்​வறிக்​கை​யில்​ கூறப்பட்​டு உள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x