Published : 30 Jun 2025 02:51 PM
Last Updated : 30 Jun 2025 02:51 PM

ரிப்பேர் பார்க்க ஒப்பந்தம் போடவில்லை: வனத்துறை அலுவலகங்களில் பழுதாகி நிற்கும் இ-பைக்குகள்

வேளச்சேரி வன அலுவலகத்தில் பழுது காரணமாக பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மின்சார இருசக்கர வாகனங்கள்.

வனத்​துறை அலு​வல​கத்​தில் அரசு சார்​பில் ரூ.2.32 கோடி மதிப்​பில் வழங்​கப்​பட்ட மின்​சார இருசக்கர வாக​னங்​கள் பழுதடைந்து நிற்​கின்​றன. அவற்றை பழுது பார்த்து மீண்​டும் பயன்​பாட்​டுக்கு கொண்டு வரவேண்​டும் என கோரிக்கை எழுந்​துள்​ளது.

தமிழ்​நாடு வனத்​துறை சார்​பில் செயல்​பட்டு வரும் தமிழ்​நாடு உயிர்​பன்மை பாது​காப்பு மற்​றும், பசுமை​யாக்​குதல் திட்​டத்​தின் கீழ், தமிழ்​நாட்​டில் வனப்​பரப்பை அதி​கரிக்​கும் பொருட்டு நாற்​றங்​கால் உற்​பத்​தி, நடவுப்​பணி​கள் மற்​றும் விவ​சா​யிகளுக்கு மரக்​கன்​றுகள் நடவு குறித்து விழிப்​புணர்வு ஏற்​படுத்த பல்​வேறு நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது.

இத்​திட்​டத்​தின் ஒரு பகு​தி​யாக வனப்​பகு​தி​யில் பணிபுரி​யும் வனவர்​கள், வனக்​காப்​பாளர்​களுக்கு மின்​சார இருசக்கர வாக​னங்​கள் வழங்க முடிவு செய்​யப்​பட்​டது. இதில் தமிழக வனத்​துறை​யில் புதி​தாக, 200 மின்​சார இருசக்கர வாக​னங்​கள் ரூ.2.32 கோடி செல​வில் சுற்​றுச் சூழல் மாசு ஏற்​படுத்​தாத வகை​யில் அனைத்து மாவட்​டங்​களி​லும் உள்ள வன பிரிவு அலு​வல​கங்​களுக்​கும் கடந்த 2023-ம் ஆண்​டு, ஜூன் மாதம் முதல்​வ​ரால் வழங்​கப்​பட்​டது.

மேலும், இருசக்கர வாக​னங்​களை இயக்​குதல், பராமரிப்பு மற்​றும், சார்ஜ் செய்​வது குறித்த அடிப்​படை பயிற்​சிகள் வனப் பணி​யாளர்​களுக்கு அளிக்​கப்​பட்​டது இந்​நிலை​யில் ஒரு சில மாதங்​கள் மட்​டும் இயங்​கிய இந்த மின்​சார இருசக்கர வாக​னங்​கள் தற்​போது பழுதடைந்து விட்​டன.

இதனை சீரமைக்க முடி​யாத​தால் வனத்​துறை​யின் அனைத்து பிரிவு அலு​வலங்​களி​லும் மின் வாக​னங்​கள் நிறுத்தி வைக்​கப்​பட்டுள்​ளன. இதனை சீரமைக்க சம்​பந்​தப்​பட்ட நிறு​வனத்தை வனத்​துறை​யினர் அணுகிய போது, தமிழக அரசு விற்​பனைக்கு மட்டுமே எங்​களிடம் ஒப்​பந்​தம் போட்​ட​தாக​வும், அதனை சீரமைக்க ஒப்​பந்​தம் இல்லை என்​ப​தால் அதனை சரி செய்ய முடி​யாது என தெரி​வித்​த​தாக கூறப்​படு​கிறது.

இதனால் வனத்​துறை​யினர் வாக​னங்களை ஆங்​காங்கே நிறுத்தி வைத்​துள்​ளனர். எதற்​காக இந்த வாக​னங்​கள் வாங்​கப்​பட்​டதோ அந்த நோக்​கம் நிறைவேறாமல், மக்​களின் வரிப்​பணம், அரசின் நிதி வீணடிக்​கப்​பட்​டுள்​ளது இவற்றை சரி செய்து மீண்​டும் பயன்​படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும் என, வனத்​துறை​யினர் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

இதுகுறித்து வனத்​துறை அதி​காரி ஒரு​வர் கூறிய​தாவது: நல்ல நோக்​கத்​துக்​காக மின்​சார இருசக்கர வாக​னம் வாங்​கப்​பட்டு பயன்​படுத்​தப்​பட்டு வந்​தது. இதற்​காக இந்த வாக​னத்தை இயக்​குபவர்​களுக்கு பயிற்​சி​யும் அளிக்​கப்​பட்​டது. தற்​போது, 80 சதவீத வாக​னங்​கள் பழுதடைந்து அனைத்து அலு​வல​கங்​களி​லும் பயன்​படுத்​தாமல் வைக்கப்பட்​டுள்​ளது. வெளி சந்தை​யில் சென்று பழுதை சரி செய்​ய​லாம் என்​றால் பலருக்கு இந்த வாக​னத்​தின் தொழில்​நுட்​பம் தெரியவில்​லை. தெரிந்​தவர்​கள் சீரமைக்க ஆயிரக்​கணக்​கில் எதிர்​பார்க்​கின்​றனர்.

இதனால் பழுதடைந்த வாக​னங்​களை சீரமைப்​ப​தில் சிக்​கல் ஏற்​பட்​டுள்​ளது. சம்​பந்​தப்​பட்ட தயாரிப்பு நிறு​வனம் தான் இதை சரி செய்ய வேண்​டும் என அந்த நிறு​வனத்தை அணுகியபோது, வாக​னம் பழுதடைந்​தால் அதனை சீரமைப்​ப​தற்​கான ஒப்​பந்​தம் போடப்​பட​வில்லை என கூறப்​படு​கிறது.

தமிழ்​நாடு மோட்​டார் வாக​னங்​கள் பராமரிப்​புத் துறை​யால் அனைத்து அரசுத் துறை வாக​னங்​களுக்​கும் தேவை​யான பராமரிப்பு பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. ஆனால் மின்​சார இருசக்கர வாக​னங்​களை சீரமைக்கும் வசதி இல்​லை. இதுகுறித்து துறை உயர் அதிகாரிகளின் கவனத்​துக்கு கொண்டு சென்​றிருக்​கிறோம். தீர்​வு கிடைக்​கும்​ என நம்​புகிறோம்​ என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x