Published : 30 Jun 2025 06:53 AM
Last Updated : 30 Jun 2025 06:53 AM

சுந்தரம் பைனான்ஸ் நிறுவன வட்டி விகிதங்கள் மாற்றம்

சென்னை: ரிசர்வ் வங்கி அறி​வித்த ரெப்போ விகித மாற்​றத்தை தொடர்ந்​து, சுந்​தரம் பைனான்ஸ் நிறு​வனம் வைப்​புத் தொகை வட்டி விகிதங்​களை மாற்றி அமைத்​துள்​ளது. இதன்​படி, மூத்த குடிமக்​களுக்​கான வைப்​பு தொகைக்​கு, 12 மாதங்​களுக்கு 7.2%, 24 மற்றும் 36 மாதங்​களுக்கு 7.5% வட்டி நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இது​போல பிற வாடிக்​கை​யாளர்​களுக்​கான வைப்​புத் தொகைக்​கு, 12 மாதங்​களுக்கு 6.7%, 24 மற்​றும் 36 மாதங்​களுக்கு 7% வட்டி நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

இது வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. சுந்​தரம் பைனான்ஸ் நிறு​வனம், டிஜிட்​டல் வைப்​புத் தொகை வசதியை சமீபத்​தில் அறி​முகப்​படுத்​தி​யது. இது, சேமிப்பை இது​வரை இல்​லாத வகை​யில் எளி​தாக​வும், பாது​காப்​பாக​வும், எளிமை​யாக அணுகக்​கூடிய​தாக​வும் மாற்​றி​யுள்​ளது.

வாடிக்​கை​யாளர்​கள், தங்​களது வைப்​புத் தொகைகளை ஒரே சீரான மற்​றும் பாது​காப்​பான செயல்​முறை வழி​யாக டிஜிட்​டல் முறையிலேயே முதலீடு செய்​ய​வும் அவற்றை நிர்​வகிக்​க​வும் முடி​யும். இதன் மூலம் வாடிக்​கை​யாளர்​களுக்கு கவர்ச்​சிகர​மான வட்டி வரு​வா​யுடன் முழு​மை​யான மன நிம்​ம​தி​யும் உறுதி செய்​யப்​படு​கிறது. ஆன்​லைன் முறையி​லான இந்த பரிவர்த்​தனையை இந்​நிறு​வனத்​தின் இணை​யதளம் வழி​யாக எளி​தாக மேற்​கொள்​ள முடி​யும்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x