தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9000-க்கு கீழ் குறைந்தது

தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9000-க்கு கீழ் குறைந்தது
Updated on
1 min read

சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 27) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.680 குறைந்தது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை மூலம் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அவ்வப்போது தங்கத்தின் விலை சற்று குறைந்தாலும், போர்ப் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் அதிகளவு உயர்ந்தது. குறிப்பாக கடந்த 14-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.74,560 என்றளவில் வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது.

இதைத் தொடர்ந்து கடந்த 23-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. குறிப்பாக கடந்த 22-ம் தேதி பவுன் ரூ.73,880-க்கும் நேற்று முன்தினம் ரூ.72,560 என்றும் விற்பனையானது. அந்த வகையில் 3 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,320 குறைந்தது. நேற்று தங்கம் விலையில் மாற்றமின்றி, அதே விலைக்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்று (ஜூன் 27) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.85 குறைந்து ஒரு கிராம் ரூ.8,985-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.680 குறைந்து ஒரு பவுன் ரூ.71,880-க்கு விற்பனையாகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in