காஞ்சியில் மழை, வெயிலில் வீணாகும் கடைகள்: சாலையோர வியாபாரிகளுக்கு பயன்படுமா?

காஞ்சிபுரத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு வழங்குவதற்காக வாங்கப்பட்டு பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள சாலையோர கடைகள்.
காஞ்சிபுரத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு வழங்குவதற்காக வாங்கப்பட்டு பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள சாலையோர கடைகள்.
Updated on
1 min read

​காஞ்​சிபுரம் மாநக​ராட்​சி​யில் மாற்​றுத் திற​னாளி​கள், ஆதர​வற்​றவர்​கள் சாலை​யோரத்​தில் கடைகளை வைத்து நடத்​து​வதற்​காக மாநக​ராட்சி மூலம் வாங்​கப்​பட்ட ஆயத்த கடைகள் பயன்​படுத்​தப்​பாடமல் காஞ்​சிபுரம் பேருந்து நிலை​யத்​தில் மழை​யிலும், வெயி​லிலும் போட்டு வைக்​கப்​பட்​டுள்​ளன.

காஞ்​சிபுரம் நகராட்சி கடந்த 2022-ம் ஆண்டு மாநக​ராட்​சி​யாக தரம் உயர்த்​தப்​பட்​டது. இதனை தொடர்ந்து அந்த மாநக​ராட்சி மூலம் சாலை​யோரத்​தில் உடல் ஊனமுற்​றோர், விதவை​கள், கணவ​னால் கைவிடப்பட்டோர் போன்​றோர் கடை வைப்​ப​தற்​கும், அவர்​களுக்கான வாழ்வாதாரத்தை உறுதி செய்​ய​வும் 50 ஆயத்த கடைகள் வாங்​கப்​பட்​டன. தாம்​பரம் மாநக​ராட்​சிக்கு அரசு மூலம் வழங்​கப்​பட்ட இந்த கடைகளில் மிகு​தி​யாக இருந்​தவை காஞ்​சிபுரம் மாநக​ராட்​சிக்கு எடுத்து வரப்​பட்​டன.

இரும்​பால் செய்​யப்​பட்ட இந்த கடைகளை சாலை​யோரங்​களில் வைத்து பயன்​படுத்​தும் வகை​யில் உள்​ளன. இந்த கடைகளை வழங்​கு​வதற்​காக முதல்​கட்​ட​மாக 25 பயனாளி​கள் தேர்வு நடை​பெற்​றது ஆனால் இந்த நடவடிக்​கைகள் ஓராண்டை கடந்த நிலை​யில் கடைகள் இன்​னும் யாருக்​கும் ஒப்​படைக்​கப்​பட​வில்​லை.

முதலில் இந்த 50 கடைகளும் காஞ்​சிபுரம் அண்ணா அரங்​கில் வைக்​கப்​பட்​டிருந்​தன. ராணுவத்​துக்கு ஆள்​சேர்ப்பு முகாம் நடை​பெறும்​போது பலர் அங்கு தங்​கிய​தால் அங்​கிருந்த கடைகள் தற்​போது காஞ்​சிபுரம் பேருந்து நிலை​யத்​தில் உத்​திரமேரூர் பேரூந்​துகள் நிற்​கும் இடத்​துக்கு அருகே வைக்​கப்​பட்​டுள்​ளன. கழி​வறைக்கு அருகே இந்த கடைகளை வைத்​திருந்​தப்​பது பலரை முகம் சுளிக்க வைத்​துள்​ளது. மழை​யிலும், வெயி​லிலும் இருப்​ப​தால் கடைகள் வீணாகி வரு​கின்​றன.

இது குறித்து சமூக ஆர்​வலர் கிருஷ்ண​மூர்த்​தி​யிடம் கேட்​ட​போது, உண்​மை​யில் இந்த ஆயத்த கடைகள் வழங்​கும் திட்​டம் நல்ல திட்​டம். இதன் மூலம் வரு​மானம் இல்​லாமல் தவிக்​கும் மாற்​றுத்​திற​னாளி​கள், விதவை​கள், கணவ​னால் கைவிடப்​பட்​ட​வர்​களுக்கு முக்​கி​யத்​து​வம் அளித்து இந்த கடைகள் வழங்க திட்​ட​மிட்​ட​தாக கூறப்​படு​கிறது. திட்​டங்​களை சரி​யாக வகுத்து முறை​யாக செயல்​படுத்​த​வில்​லை. இந்த கடைகள் பயனாளி​களுக்கு வழங்​கப்​ப​டா​மல் பேருந்து நிலை​யம் அருகே வைத்து வீணாகி வரு​கின்​றன. உடனடி​யாக இந்த கடைகளை சரி​யான பயனாளி​களை தேர்வு செய்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்​றார்.

இது குறித்து காஞ்​சிபுரம் மாநக​ராட்சி தலைமை பொறி​யாளர் கணேஷிடம் கேட்​ட​போது இது குறித்து காஞ்​சிபுரம் மாநக​ராட்சி நிதி பிரி​வில்​தான் கேட்க வேண்​டும். கடைகளை விரை​வில் பயனாளி​களுக்கு வழங்க அவர்​களிடம் தெரிவிக்​கிறேன் என்​றார். இது குறித்து நிதிப் பிரிவு அதி​காரி​யிடம் கேட்​ட​போது அந்த கடைகளை பல ஆண்​டு​களாக அப்​படியே வைத்​துள்​ளனர். அதனை மாநக​ராட்சி கவுன்​சிலிடம் உரிய அனு​மதி பெற்று பயனாளி​களுக்​கு வழங்​கு​வதற்​கான நடவடிக்​கைகள்​ எடுக்​கப்​படும்​ என்​றார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in