Last Updated : 01 Jul, 2018 04:59 PM

 

Published : 01 Jul 2018 04:59 PM
Last Updated : 01 Jul 2018 04:59 PM

ஜிஎஸ்டியினால் வரித்துறை அதிகாரிகளுக்குத்தான் அசாதாரணமான அதிகாரங்கள், மற்றபடி மக்களுக்குச் சுமைதான்: ப.சிதம்பரம் விமர்சனம்

ஜிஎஸ்டி வரிவிதிப்புத் திட்டத்தின் நன்மைகளை பாஜகவினர் அதன் ஓராண்டு நிறைவு தினத்தை ஒட்டி விதந்தோதி வரும் நிலையில் இத்திட்டத்தை முதன் முதலில் உருவாக்கிய காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம் பாஜக அதனை அமல்படுத்திய விதம் குறித்துச் சாடியுள்ளார்.

சாமானிய மக்களின் வரிச்சுமையை ஜிஎஸ்டி அதிகரித்துள்ளதோடு, வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், தொழில் முனைவோரிடம் ஜிஎஸ்ட் என்றால் அது ஒரு கெட்ட வார்த்தை என்பதாகவே தொனித்துள்ளது என்று ப.சிதம்பரம் புதியத் தாக்குதல் ஒன்றை தொடுத்துள்ளார்.

புதுடெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ப.சிதம்பரம் கூறியதாவது:

அதன் வடிவம், அமைப்பு, முதுகெலும்பாம் உள்கட்டமைப்பு வரிவிகிதம் அல்லது வரி விகிதங்கள் அதன் அமலாக்கம் ஆகியவை மிகவும் தவறானது எனவே வர்த்தகர்கள், வியாபாரிகள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் பொது ஜனங்கள் ஆகியோரிடத்தில் ஜிஎஸ்டி என்பது ஒரு கெட்டவார்த்தையாகவே தொனிக்கிறது,

இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பினால் மகிழ்ச்சியடைந்த ஒரே பிரிவினர் வரித்துறையினர்தான், அவர்களுக்கு வானாளவிய அதிகாரம்.

ஜிஎஸ்டி வரி சாதாரண ஜனங்களின் வரிச்சுமையை குறைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது நிறைவேறவில்லை. மாறாக வரிச்சுமையை அவர்கள் மேல் ஏற்றியுள்ளது.

ஜிஎஸ்டி அரசமைப்பு சட்ட மசோதா ஆரம்பத்திலிருந்து எடுத்து வைக்கப்பட்ட் ஒவ்வொரு அடியும் தவறானவை. குறிப்பாக வரி விகிதங்களில் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கூறிய பல ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டன.

இவ்வாறு கூறினார் ப.சிதம்பரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x