சூப்பர் மார்க்கெட்டில் எல்பிஜி விற்க ஐஓசி முடிவு

சூப்பர் மார்க்கெட்டில் எல்பிஜி விற்க ஐஓசி முடிவு

Published on

சிறிய அளவிலான 5 கிலோ எடையுள்ள எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர்களை சூப்பர் மார்க்கெட் டுகளில் விற்பனை செய்ய இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) திட்ட மிட்டுள்ளது.

இப்போது பெட்ரோல் நிரப்பு நிலையங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படும் சிறிய ரக 5 கி.கி. எடையுள்ள சிலிண்டர்கள் இனி பெரிய மளிகைக் கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

பெங்களூர், சென்னை, கோர் காபூர், லக்னௌ உள்ளிட்ட நகரங்களில் முதல் கட்டமாக இந்த விற்பனை தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் சிறிய ரக சிலிண்டர்கள் விற்பனையை ஐஓசி தொடங்கியது. டெல்லியில் 5 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை ரூ. 437 ஆகும்.

வீடுகளுக்கு மானிய விலையில் இப்போது வழங்கப்படும் 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை ரூ. 414 ஆக உள்ளது. வீட்டை விட்டு வெளியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள், தகவல் தொழில்நுட்பத் துறை யில் பணிபுரிபவர்கள் ஆகியோர் தாங்களாகவே சமைத்துக் கொள்வதற்கு வசதியாக சிறிய ரக சிலிண்டர்கள் அறிமுகப்படுத் தப்பட்டுள்ளன.

இத்தகைய சிலிண்டர்கள் பெருமளவிலானோரைச் சென்ற டைய வேண்டும் என்பதற்காக சூப்பர் மார்க்கெட், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றில் விற்பனை செய்ய முடிவு செய்துள் ளதாக ஐஓசி தெரிவித்துள்ளது.

ஐந்து நகரங்களில் 11 சூப்பர் மார்க்கெட்டில் முதல் கட்டமாக விற்பனை செய்யப்படும் என்றும் இது அடுத்த கட்டமாக 50 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் ஐஓசி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

முதல் முறையாக இத்தகைய சிலிண்டரை வாங்குவோர் ரூ. 1,600 முதல் ரூ. 1,700 வரை செலவிட வேண்டியிருக்கும். வாயு நிரப்பிய சிலிண்டர், ரெகுலேட்டர், காப்பீட்டுத் தொகை, நிர்வாகச் செலவு ஆகியவற்றுக்கு கட்டணமாக இந்தத் தொகையை செலுத்த வேண்டும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in