Published : 24 Aug 2014 12:37 PM
Last Updated : 24 Aug 2014 12:37 PM

அந்நிய முதலீடு காரணமாக பங்குச் சந்தைகள் உயர்வு

மும்பை அந்நிய முதலீடு கடந்த வாரத்தில் உயர்ந்ததன் காரணமாக சென் செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து முடிவடைந்தது. கடந்த வாரத்தில், வர்த்தகத்தின் இடையே உச்சபட்ச அளவாக 26530 புள்ளியை தொட்டது.

இதேபோல நிப்டியும் 121 புள்ளிகள் கடந்த வாரத்தில் உயர்ந்தது. வர்த்தகத்தின் இடையே 7929 என்ற உச்சபட்ச புள்ளியை கடந்த வாரத்தில் தொட்டது. கச்சா எண்ணெய் விலை குறைவு, சர்வதேச அளவில் சாதகமான சூழ்நிலை மற்றும் இந்தியாவுக்கான தகுதியை எஸ் அண்ட் பி நிறுவனம் உயர்த்தும் என்ற ஊகம் ஆகிய காரணங்களால் பங்குச்சந்தை உயர்ந்ததாக ஹெச்.டி.எஃப்.சி. செக்யூரெட்டீஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஸ்மால் மற்றும் மற்றும் மிட்கேப் குறியீடுகளும் உயர்ந்து முடிவடைந்தன. அதேபோல துறை வாரியாக இருக்கும் 12 குறியீடுகளில் எப்.எப்.சி.ஜி. குறியீட்டை தவிர மற்ற அனைத்து குறியீடுகளும் உயர்ந்தே முடிவடைந்தன. பங்குச்சந்தை தொடர்ந்து உயர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். 7930 புள்ளிகளுக்கு மேலே நிப்டி முடிவடையும் பட்சத்தில் 8000 புள்ளிகளை நிப்டி தொடும் என்று ஹெச்.டி.எப்.சி செக்யூ ரெட்டீஸ் அறிக்கை தெரி விக்கிறது. ஒரு வேளை இறங்கும் பட்சத்தில் 7840 புள்ளிகள் வரை சரியலாம் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x