Published : 08 May 2025 11:47 AM
Last Updated : 08 May 2025 11:47 AM
சென்னை: சென்னையில் இன்று (மே.8) தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.55 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,130-க்கு விற்பனையாகிறது.
சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த மாதம் 14-ம் தேதி ஒரு பவுன் ரூ.69,760-க்கு விற்பனையானது. பின்னர், படிப்படியாக அதிகரித்தது.
‘ஷாக்’ கொடுத்த தங்கம்: இந்நிலையில், நேற்று (மே.7) ஒரே நாளில் 2 முறை அதிகரித்து ‘ஷாக்’ கொடுத்தது. அதன்படி, நேற்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ.125 அதிகரித்து ரூ.9,025-க்கும், ஒரு பவுனுக்கு ரூ.1,000-ம் அதிகரித்து ரூ.72,200-க்கும் விற்பனையானது.
பின்னர், மதியம் மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. அதன்படி, ஒரு கிராம் ரூ.75 அதிகரித்து ரூ.9,100-க்கும், ஒரு பவுன் ரூ.600 அதிகரித்து ரூ.72,800-க்கும் விற்பனையானது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,600 அதிகரித்தது.
இன்றைய நிலவரம்: தொடர்ந்து இன்றும் தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,130-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.440 அதிகரித்து ஒரு பவுன் ரூ.73,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.110-க்கும், கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ரூ.70,040 டூ ரூ.73,040 - 22 கேரட் ஆபரணத் தங்கம் கடந்த மே 2-ம் தேதி ஒரு பவுன் ரூ.70,040-க்கு விற்பனையான நிலையில், இன்று மே.8-ம் தேதி ஒரு பவுன் ரூ.73,040-க்கு விற்பனையாகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT