சுந்தரம் பைனான்ஸ் டெபாசிட் வட்டி விகிதம் மாற்றியமைப்பு

சுந்தரம் பைனான்ஸ் டெபாசிட் வட்டி விகிதம் மாற்றியமைப்பு
Updated on
1 min read

சென்னை: இந்தியாவின் முன்னணி வங்கிசாரா நிதி நிறுவனங்களுள் ஒன்றான சுந்தரம் பைனான்ஸ் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை மாற்றியமைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் ரெப்போ வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. இதற்கு, இணக்கமாக வட்டி விகிதங்களை மாற்றியமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி மூத்த குடிமக்களுக்கான 12 மாத டெபாசிட் வட்டி விகிதம் 7.70 சதவீதமாகவும், 24 மற்றும் 36 மாதங்களுக்கான வட்டி விகிதம் 8 சதவீதமாகவும் இருக்கும்.

இதைப்போலவே, பிற நபர்களுக்கு 12 மாத டெபாசிட் வட்டி விகிதம் 7.20 சதவீதமாகவும், 24 மற்றும் 36 மாத டெபாசிட்டிற்கான வட்டி 7.50 சதவீதமாகவும் இருக்கும்.

மாற்றியமைக்கப்பட்ட இந்த வட்டி விகிதம் மே 1-ம் (இன்று) தேதி முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு சுந்தரம் பைனான்ஸ் கூறியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in