Published : 29 Apr 2025 09:57 AM
Last Updated : 29 Apr 2025 09:57 AM
சென்னையில் இன்று (ஏப்.29) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.8,980 ஆகவும், பவனுக்கு ரூ.320 உயர்ந்து 71,840 ஆகவும் விற்பனையாகி வருகிறது. நாளை அட்சய திருதியை வரும் நிலையில், இந்த விலை உயர்வு நகை வாங்குபவர்களுக்கு சற்று கவலையை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு தங்கம் விலை ஏறுமுகத்தில் இருந்தது. குறிப்பாக, பிற நாடுகளுடன் வரி போர் அறிவித்ததையடுத்து, சர்வதேச அளவில் தங்கம் விலை தினசரி ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
கடந்த 22-ம் தேதியன்று ஒரு பவுன் ரூ.74,320 -க்கு அதிகரித்து புதிய வரலாற்று உச்சத்தை அடைந்தது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை சற்று குறைய தொடங்கியது. தங்கம் விலை நேற்று ஒரு கிராம் ரூ.65 குறைந்து கிராம் ரூ.8,940-க்கும், ஒரு பவுன் ரூ.520 குறைந்து ரூ.71,520-க்கும் விற்பனையானது.
நாளை அட்சய திருதியை வரும் நிலையில், இந்த விலை குறைப்பு நகை வாங்குபவர்களுக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தியது. ஆனால், தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது, பொது மக்களுக்கு கவலையில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் இன்று (ஏப்.29) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.8,980 ஆகவும், பவனுக்கு ரூ.320 உயர்ந்து 71,840 ஆகவும் விற்பனையாகி வருகிறது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.78,376-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை குறைந்தது: வெள்ளி விலை இன்று ஒரு கிராம் ரூ.111-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,11,000 ஆக உள்ளது.
பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுவது, அக்ஷய திருதியை உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் தேவை அதிகரித்து, தற்போது ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT