Published : 28 Apr 2025 06:21 AM
Last Updated : 28 Apr 2025 06:21 AM

கடந்த 2024-25 நிதியாண்டில் ரூ.2,644 கோடி லாபம் ஈட்டிய எல் அண்ட் டி ஃபைனான்ஸ்

சென்னை: ​நாட்​டின் முன்​னணி வங்​கி​சாரா நிதி நிறு​வனங்​களில் ஒன்​றான எல் அண்ட் டி பைனான்​ஸ், 2024-25நி​தி​யாண்​டில், வரிக்​குப் பிந்​தைய லாப​மாக ரூ.2,644 கோடியை ஈட்​டி​யுள்​ளது. இது, இது​வரை இல்​லாத உயர்வு ஆகும்.

மேலும், முந்​தைய ஆண்​டை​விட 14% வளர்ச்சி ஆகும். மார்ச் 31, 2025 உடன் முடிந்த 4-வது காலாண்​டில் இந்​நிறு​வனம் ரூ.636 கோடியை வரிக்​குப் பிந்​தைய லாப​மாக ஈட்​டி​யிருக்​கிறது. இது, முந்​தைய ஆண்​டின் இதே கால​கட்​டத்​தை​விட 15% அதி​கம் ஆகும்.

கடந்த 2023-24 நிதி​யாண்​டோடு ஒப்​பிடு​கை​யில் 2024-25 நிதி​யாண்​டில் சில்​லரை கடன்​கள் 19% உயர்ந்​து, ரூ.95,180 கோடி​யாகி உள்​ளது. இந்​நிறு​வனத்​தின் இயக்​குநர​வைக் கூட்​டம் கடந்த 25-ம் தேதி நடை​பெற்​றது.

இதில், 2024-25 நிதி​யாண்​டுக்​கான பங்​கா​தாய​மாக (டி​விடெண்ட்) பங்கு ஒன்​றுக்கு ரூ.2.75- ஐ அறி​வித்​தது. இந்​நிறு​வனம் இது​வரை அறி​வித்​த​திலேயே இது​தான் அதி​கபட்​சம்​ ஆகும்​. டிவிடெண்ட் தொகை 30 நாட்களுக்குள் முதலீட்டாளர்கள் கணக்கில் வரவு
வைக்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x