Published : 26 Jul 2018 08:27 AM
Last Updated : 26 Jul 2018 08:27 AM

போலி செய்திகள் தடுப்பு நடவடிக்கை: தகவல் தொழில்நுட்ப செயலருடன் வாட்ஸ் அப் சிஓஓ சந்திப்பு

வாட்ஸ் அப் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி (சிஓஓ) மாத்யூ ஐடீமா உட்பட வாட்ஸ் அப்பின் முக்கிய நிர்வாகிகள் பலர், இந்திய தகவல் தொழில்நுட்ப செயலர் மற்றும் பிற அரசு அதிகாரிகளை சந்தித்து போலி செய்திகளைத் தடுப்பதற்கு வாட்ஸ் அப் எடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போலி செய்திகளைத் தடுப்ப தற்கு பேஸ்புக்கின் துணை நிறுவன மான வாட்ஸ் அப் எடுத்துவரும் நடவடிக்கைகளை பற்றி தகவல் தொழில்நுட்ப செயலர் அஜய் பிரகாஷ் சஹானியை சந்தித்து வாட்ஸ் அப் தலைமை செயல்பாட்டு அதிகாரி மாத்யூ ஐடீமா ஆலோசனை நடத்தியுள்ளார். வாட்ஸ் அப் பேமெண்ட் சேவை விரிவாக்கத்துக்கு அரசு இன்னும் அனுமதி அளிக்காத நிலையில் அதுகுறித்தும் ஆலோசனை நடை பெற்றதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.

இந்திய சமூக இணைப்பின் வளர்ச்சி குறித்தும், தனிநபர்களுக்கு இடையேயான தகவல்களை என்கிரிப்டட் வடிவத்தில் அளிப்பதன் தேவை குறித்தும் டிஜிட்டல் நிபுணர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் வாட்ஸ் அப் நிறுவனம் ஆலோ சனை நடத்தியதாகவும், தவறான தகவல்கள் பரவுவதை தடுப்பதற் கான நடவடிக்கைகள் அரசாங்கம், சமூகம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து வெளிவர வேண்டும் எனவும் இதுதொடர்பாக வாட்ஸ் அப் செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார். போலி செய்திகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு நிறு வனங்களுடன் இணைந்து செயல்படுவோம் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக சில புதிய பாதுகாப்பு வசதிகளை அறிமுகப் படுத்தியுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஃபார்வர்டு முறையில் அனுப்பப் படும் குறுந்தகவல்களை ஃபார் வர்டட் என்ற வார்த்தையுடன் காட்டும் வகையிலான மாற்றம், குழு அரட்டைகளை கட்டுப்படுத்தும் வகையிலான சில மாற்றங்கள் போன்றவற்றை கடந்த சில வாரங்களில் வாட்ஸ் அப் நிறுவனம் செய்துள்ளது.

போலிச் செய்திகளை கட்டுப் படுத்த நடவடிக்கைகள் எடுக்குமாறு வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு இந்திய அரசாங்கம் இதுவரை 2 நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது. வதந்திகளைப் பரப்புவதற்கு பயன்படும் ஊடகமாக இருந்து விட்டு அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்தால், குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததாக வாட்ஸ் அப் நிறுவனம் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்றும் அரசு எச்சரித் திருந்தது.

வாட்ஸ் அப் நிறுவனம் முதல் நோட்டீஸுக்கு பதில் அளித்துள்ள நிலையில் இரண்டாவது நோட் டீஸுக்கு இன்னும் பதிலளிக்க வில்லை. தனிநபர் என்கிரிப்டட் தகவல்களை தாங்கள் பார்க்க முடியாது என்பதால் போலி செய்திகளுக்கு எதிராக நட வடிக்கை எடுக்கமுடியாத நிலை யில் தாங்கள் இருப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தது.

தனிநபர்கள் அளிக்கும் தகவல் கள் அடிப்படையில் ஒரு நபரை வாட்ஸ் அப்பிலிருந்து நிரந்தரமாக நீக்குவதைத்தான் தாங்கள் செய்ய முடியும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது.

போலி செய்திகளை கண்டறிவது எப்படி என்பது தொடர்பாக டிஜிட் டல் பயிற்றுவிப்பு நிகழ்ச்சி களை வாடிக்கையாளர்களுக்கு நடத்துவதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து வாட்ஸ் அப் நிறுவனம் பணியாற்றிவருகிறது. முன்னணி செய்திதாள்களில் போலி செய்தி விழிப்புணர்வு தொடர்பாக முழுபக்க விளம்பரங்களையும் வாட்ஸ் அப் வெளியிட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத் துடனும் இதுதொடர்பாக வாட்ஸ் அப் இணைந்து பணியாற்றி வருகிறது. பிரேசில் மற்றும் மெக்சிகோவில் போலி செய்திகளை கண்டறிவதற்காக தாங்கள் பயன்படுத்திவரும் வெரிஃபிக்கடோ என்ற அமைப்பையும் இந்தியாவில் வாட்ஸ் அப் அறிமுகப்படுத்த உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x