Published : 14 Apr 2025 09:33 AM
Last Updated : 14 Apr 2025 09:33 AM
சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் வந்தே பாரத் பார்சல் ரயில் தயாரிப்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
உலக புகழ்பெற்ற ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை சென்னை பெரம்பூரில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு வகைகளில் 72,000-க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. தற்போது, வந்தே பாரத் ரயில், அம்ரித் பாரத் ரயில் உட்பட வந்தே பாரத் ரயில் வகைகள் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, நாட்டின் முதல் அதிவேக வந்தே பாரத் பார்சல் ரயில் தயாரிப்பு பணி ஐசிஎஃப் ஆலையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
16 பெட்டிகளை கொண்ட இந்த வந்தே பாரத் பார்சல் ரயில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. உணவுப்பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்லும் வசதி இடம்பெறும். குறிப்பாக, குளிரூட்டப்பட்ட பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து, சென்னை ஐசிஎஃப் அதிகாரிகள் கூறியதாவது: பெரு நகரங்களுக்கு இடையே சரக்கு ரயில் சேவையின் தேவை அதிகரித்து உள்ளது. முதல் முறையாக ஒரு முழுமையான பார்சல் ரயில் இயக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டது. அதன்படி, முதல் பார்சல் ரயில் தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெறுகிறது. தற்போது இப்பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஒரே நேரத்தில் 264 டன் சரக்குகளை ஏற்றிச் செல்ல முடியும். தனியார் நிறுவனங்கள் தங்களின் பொருட்களை விரைவாகவும், பாதுகாப்பாகவும் எடுத்துச் செல்ல முடியும். இந்த ரயிலில் குளிரூட்டப்பட்ட வசதியும் இடம் பெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT