தங்கம் விலை தொடர் சரிவு: இன்று பவுனுக்கு ரூ.200 குறைந்தது

தங்கம் விலை தொடர் சரிவு: இன்று பவுனுக்கு ரூ.200 குறைந்தது
Updated on
1 min read

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.66,280-க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,285-க்கு விற்பனை.

தங்கம் விலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு பவுன் ரூ.68,000+ கடந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஏப்ரல் 4-ம் தேதி பவுனுக்கு ரூ.1,280 மற்றும் ஏப்ரல் 5-ம் தேதி பவுனுக்கு ரூ.720 என தங்கம் விலை குறைந்தது. இரண்டு நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,000 வரை சரிந்தது.

இந்த நிலையில் இன்று (ஏப்.7) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.25 என குறைந்துள்ளது. தற்போது ஒரு பவுன் தங்கம் ரூ.66,280 மற்றும் ஒரு கிராம் ரூ.8,285 என சந்தையில் விற்பனை ஆகிறது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.103-க்கு விற்பனை ஆகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,03,000-க்கு விற்பனை.

முதலீடு குறைந்தது; விலை சரிந்தது! உலக அளவில் தங்கத்துக்கு டிமாண்ட் அதிகம் உள்ளது. அதன் காரணமாக சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப அதன் விலை ஏற்ற இறக்குத்துடன் இருப்பது வழக்கம். இருப்பினும் இந்தியாவில் அண்மையில் வரலாறு காணாத வகையில் புதிய விலை உச்சத்தை எட்டியது தங்கம். இதற்கு உலக நாடுகளிடையே நிலவும் வர்த்தக ரீதியான தாக்கமும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

அண்மையில் பரஸ்பர வரி விதிப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உலக நாடுகளுக்கு அறிமுகம் செய்தார். அதேபோல பல்வேறு நாடுகள் தங்கத்தின் மீதான முதலீட்டை திரும்பப் பெறுவது போன்ற காரணங்களால் தற்போது தங்கம் விலை குறைந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in