2025-26-ம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.5% வளர்ச்சியடையும்

2025-26-ம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.5% வளர்ச்சியடையும்
Updated on
1 min read

புதுடெல்லி: ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து தொடங்கும் 2025-26-ம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.5 சதவீத வளர்ச்சியை காணும் என்று எர்னஸ்ட் & யங் (இஒய்) நிறுவனம் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

மனித மூலதன மேம்பாட்டுக்கு உதவிடும் வகையில் நன்கு அளவீடு செய்யப்பட்ட நிதி வியூக திட்டங்கள் மற்றும் விவேகமான நிதி பராமரிப்பு ஆகியவற்றால் நீண்ட கால வளர்ச்சிக்கான வாய்ப்புகளை கணிசமாக அதிகரிக்க முடியும்.

ஏப்ரல் 2024 முதல் மார்ச் 2025 வரையிலான நிதி ஆண்டில் இந்தியாவின் உண்மையான பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஏப்ரலில் தொடங்கும் 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், விக்சித் பாரதத்துக்கான இலக்கை நோக்கிய பயணத்துக்கு நிதிக் கொள்கையில் மறுசீரமைப்பு செய்ய வேண்டியது அவசியம் என இஒய் தெரிவித்துள்ளது.

தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிடப்பட்ட அண்மையில் வெளியிட்ட மறுமதிப்பீட்டு தரவுகளின்படி, இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 2023,24,25 நிதியாண்டுகளில் முறையே 7.6 சதவீதம், 9.2 சதவீதம், 6.5 சதவீதமாக இருக்கும் என்று தற்போது கணிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in