கோ​யம்​பேடு சந்​தை​யில் காய்​கறி விலை வீழ்ச்சி: பீட்​ரூட், முட்​டை​கோஸ் ரூ.5-க்கு விற்​பனை

கோ​யம்​பேடு சந்​தை​யில் காய்​கறி விலை வீழ்ச்சி: பீட்​ரூட், முட்​டை​கோஸ் ரூ.5-க்கு விற்​பனை

Published on

சென்னை: கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. பீட்ரூட், முட்டைக்கோஸ் கிலோ ரூ.5-க்கு விற்கப்படுகிறது.

கோயம்பேடு சந்தையில் கடந்த ஒரு மாதமாக காய்கறி விலை குறைந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக பல காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக, மொத்த விலையில் பீட்ரூட், முட்டைக்கோஸ் தலா ரூ.5, முள்ளங்கி ரூ.8, நூக்கல், புடலங்காய் தலா ரூ.10 என விலை வீழ்ச்சி அடைந்துள்ளன.

கிலோ ரூ.100-க்கு மேல் விற்கப்பட்டு வந்த முருங்கைக்காய் ரூ.10 ஆகவும், பீன்ஸ் ரூ.60 ஆகவும் விலை குறைந்துள்ளது. ரூ.40-க்கு மேல் விற்கப்பட்ட தக்காளி ரூ.15, ரூ.75-க்கு மேல் விற்கப்பட்ட சாம்பார் வெங்காயம் ரூ.20 என விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

மற்ற காய்கறிகளான அவரைக்காய் ரூ.30, கத்தரிக்காய் ரூ.25, பாகற்காய், கேரட் தலா ரூ.20, பச்சை மிளகாய் ரூ.18, வெண்டைக்காய், வெங்காயம் தலா ரூ.15, உருளைக்கிழங்கு ரூ.14 என விற்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக கோயம்பேடு சந்தை வியாபாரிகளிடம் கேட்டபோது, "தற்போது காய்கறிகளுக்கு சாதகமான தட்பவெப்பநிலை நிலவுகிறது. பாசனத்துக்கு சேவையான நீரும் போதுமான அளவு உள்ளது. அதனால் கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்து, அவற்றின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இது வரும் மே மாதம் 2-வது வாரம் வரை நீடிக்கும்" என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in