

புதுடெல்லி: மதுவகைகள் மீதான வரிகளால் டெல்லி அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் வருவதாக டெல்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார்.
இதுகுறித்து டெல்லி சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு முதல்வர் ரேகா குப்தா அளித்த பதில்:
ஆம் ஆத்மி ஆட்சியின்போது புதிய மதுபானக் கொள்கை திட்டத்தை அரசு அறிவித்தது. இந்தத் திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் டெல்லி அரசுக்கு ரூ.5,068.92 கோடி, மதுவகைகள் மீதான வரிகளால் வருவாய் கிடைத்துள்ளது.
மேலும் பால், பால்பொருட்கள் கொள்முதல், விற்பனை மூலம் ஆண்டுக்கு ரூ.209.9 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த பிப்ரவரி வரையிலான வருவாயாகும் இது.
2021-22-ல் ரூ.5,487 கோடியும், 2022-23-ல் ரூ.5,487 கோடியும், 2023-24-ல் ரூ.5164 கோடியும் மதுபானங்களால் டெல்லி அரசுக்கு வருவாயாக கிடைத்தன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.