Published : 26 Jul 2018 08:29 AM
Last Updated : 26 Jul 2018 08:29 AM

மெகுல் சோக்ஸி இருப்பிடம்: ஆண்டிகுவா அதிகாரிகளுக்கு சிபிஐ கடிதம்

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி மெகுல் சோக்ஸி, ஆண்டிகுவாவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து, அவரது இருப்பிடம் குறித்த மேலதிக தகவல்களை தெரிவிக்குமாறு ஆண்டிகுவா அதிகாரிகளிடம் மத்திய குற்ற புலனாய்வு அமைப்பு (சிபிஐ) கேட்டுக்கொண்டுள்ளது.

தலைமறைவான குற்றவாளி களை இந்தியாவுக்கு நாடுகடத்தும் ஒப்பந்தங்கள் எதையும் கரீபியன் பகுதியில் உள்ள தீவுகளில் ஒன்றான ஆண்டிகுவாவுடன் இந்திய அரசு செய்துகொள்ளவில்லை. எனவே மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு அழைத்து வருவதில் சிக்கல்கள் எழும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

ஆண்டிகுவா குடியுரிமையை மெகுல் சோக்ஸி பெற்றுள்ளதாகவும் இந்திய விசாரணை அமைப்புகள் கண்டறிந் துள்ளன. 1.3 கோடியில் இருந்து 1.7 கோடி ரூபாயை அளிப்பதன் வழியாக ஆண்டிகுவா பாஸ் போர்ட்டை சோக்ஸி பெறலாம். இதன்மூலம் அவர் பிற நாடுகளுக்கு எளிதாக பயணிக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் தொடர்புடைய நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மெகுல் சோக்ஸி ஆகியோரது பாஸ்போர்ட்டுகளை கடந்த பிப்ர வரியில் இந்தியா ரத்து செய் துள்ளது. சர்வதேச அளவிலான வாரண்டுக்கு இணையான இன்டர் போல் ரெட் கார்னர் நோட்டீஸ் நீரவ் மோடி மீது பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இன்டர்போல் அமைப்பில் உறுப்பினராக உள்ள எந்த நாட்டின் காவல் துறையும் நீரவ் மோடியை கைது செய்ய முடியும்.

மெகுல் சோக்ஸிக்கு எதிராகவும் இத்தகைய இன்டர் போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கவேண்டும் என்ற சிபிஐ அமைப்பின் கோரிக்கை பரிசீலனையில் இருந்து வருகிறது.

இந்தியா, பிரிட்டன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ரூ.3,500 கோடி அளவுக்கு சொத்து உள்ள நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஸியின் சொத்துகளை பறிமுதல் செய்யும்வகையில் தலைமறைவான பொருளாதார குற்றவாளிகளாக இருவரையும் அறிவிக்கவேண்டும் என கடந்த ஜூன் மாதம் மும்பை நீதிமன்றமொன்றில் அமலாக்கத் துறை முறையிட்டுள்ளது.

உரிய விசாரணையின்றி தண்டிக்கப்பட்டு தன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதால் இந்தியா திரும்ப முடியாது என மெகுல் சோக்ஸி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையொன்றில் போலி யான உறுதியளிப்புக் கடிதங் களைப் பெற்று அதன்மூலம் ரூ.13,500 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளதாக வைர வியாபாரிகளான நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மெகுல் சோக்ஸி மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x