தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 குறைந்தது!

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 குறைந்தது!

Published on

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.65,760-ககு விற்பனை விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.1,440 அதிகரித்து ஒரு பவுன் ரூ.66,400 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. இதன்படி, கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.8,220-க்கும், பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.65,760-க்கும் விற்பனையாகிறது.

இதேபோல், 24 காரட் சுத்த தங்கம் ஒரு பவுன் ரூ.71,736-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.112-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,12,000 ஆக உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in