காப்பீட்டு மசோதா ஆண்டு இறுதியில் நிறைவேறும்: நிதி அமைச்சர் நம்பிக்கை

காப்பீட்டு மசோதா ஆண்டு இறுதியில் நிறைவேறும்: நிதி அமைச்சர் நம்பிக்கை
Updated on
1 min read

நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் காப்பீட்டு மசோதா இந்த ஆண்டு இறுதியில் நிறைவேறும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்தார்.

திருத்தப்பட்ட மசோதா விரைவில் நாடாளுமன்ற ஒப்புதல் பெறப்பட்டு அரசிதழில் வெளியிடப்படும் என்று பென்ஷன் நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் நிகழ்ச்சி(பி.எப்.ஆர்.டி.ஏ) ஒன்றில் அவர் தெரிவித்தார்.

காப்பீட்டு துறைக்கும், பென்ஷன் துறைக்கும் ஒரு நெருக்கம் இருக்கிறது. காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை அதிகரிப்பது பென்ஷன் துறை க்கும் பொருந்தும். இதன் மூலம் அதிக முதலீடு இந்தியாவுக்கு வரும், பலவகையான திட்டங்கள் கிடைக்கும் என்றார் அருண் ஜேட்லி. இதற்கு முன்பு இன்ஷூரன்ஸ் துறையில் அந்நிய முதலீடு 26 சதவீதமாக இருந்தது. மாநிலங்களவையின் ஒப்புதலுக்காக இந்த புதிய மசோதா காத்திருக்கிறது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கை காரணமாக இந்த மசோதா தள்ளிவைக் கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in