

சென்னை: சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம் டிஜிட்டல் டெபாசிட் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
நாட்டின் முன்னணி வங்கிசாரா நிதி நிறுவனங்களில் ஒன்று சுந்தரம் பைனான்ஸ். 70 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்நிறுவனம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மற்றும் நிதி பாதுகாப்புக்கு பெயர் பெற்று விளங்குகிறது. இந்நிறுவனத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் டெபாசிட் செலுத்தி உள்ளனர். இந்நிறுவனம், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஐசிஆர்ஏ மற்றும் கிரிசில் ஆகிய நிறுவனங்களால் ஏஏஏ தரச் சான்றிதழ் பெற்றுள்ளது.
இந்நிலையில், சுந்தரம் பைனானஸ் டிஜிட்டல் டெபாசிட் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனத்தின் இணையதளம் அல்லது எஸ்எப் நெக்ஸ்ட் என்ற செயலி மூலம் தங்கள் வீட்டில் இருந்தபடியே நிலையான வைப்பு திட்டங்களில் முதலீடு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் முதலீட்டை நிர்வகிக்கவும் கண்காணிக்கவும் முடியும்.