

சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 4) சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் ஆபரணட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.560 உயர்த்துள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த மாதம் 29-ம் தேதி முதல் தங்கம் விலை உயர்ந்து வந்தது. ஜன.31-ம் தேதி ஒரு பவுன் ஆபணத்தங்கம் ரூ.61 ஆயிரத்தையும், பிப்.1-ம் தேதி ரூ.62 ஆயிரத்தையும் தாண்டியது. நாள்தோறும் தங்கம் விலை உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டுவந்தது.
அதிலும், பிப்.11-ம் தேதி பவுன் தங்கம் ரூ.64,480 ஆகவும், பிப்.20-ம் தேதி ரூ.64,560 ஆகவும் உயர்ந்தது. இதன் பிறகு, சற்று விலை குறைந்தாலும், பிப்.25-ம் தேதி பவுன் தங்கம் ரூ.64,600 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை பதவு செய்து வந்தது. இதற்கிடையில் பிப்.26 தொடங்கி மூன்று நாட்கள் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1000 வரை குறைந்தது.
இந்நிலையில், சென்னையில் இன்று (மார்ச் 4) சில்லறை விற்பனைச் சந்தையில் 22 காரட் ஆபரணத் தங்கம் 1 கிராமின் விலை ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,010 ஆகவும், ஒரு பவுன் விலை ரூ.560 உயர்ந்து, பவுன் ரூ.64,080 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் ரூ.8,738 என விற்பனை.
இதனிடையே, 1 கிராம் வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ரூ.107 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,000 உயர்ந்து ரூ.1,07,000 ஆகவும் விற்பனை ஆகிறது.