பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி: முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.9 லட்சம் கோடி இழப்பு

பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி: முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.9 லட்சம் கோடி இழப்பு
Updated on
1 min read

மும்பை: பங்குச் சந்தையில் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை கடும் வீழ்ச்சி காணப்பட்டது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) போன்ற முக்கிய தரவுகளின் வெளியீடுகளுக்காக சந்தை காத்திருந்த நிலையில், அமெரிக்க

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வரி விதிப்பு அறிவிப்பு, அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ச்சியாக பங்குகளை விற்பது மற்றும் சாதகமற்ற சர்வதேச சூழல் ஆகியவை சந்தையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தின. இதனால், வங்கி மற்றும் தகவல்தொழில்நுட்ப துறை பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.

நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,414 புள்ளிகள் (-1.90%) வீழ்ச்சியடைந்து 73,198 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் 420 புள்ளிகள் (-1.86%) சரிந்து 22,124 புள்ளிகளிலும் நிலைபெற்றன.

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்படட அனைத்து நிறுவனங்களின் சந்தை மூலதனம் நேற்றைய வர்த்தகத்தில் ரூ.385.94 லட்சம் கோடியாக குறைந்தது. இதன் காரணமாக, முதலீட்டாளர்களுக்கு ரூ.9 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.

இன்டஸ்இண்ட் வங்கி (-6.18%), டெக் மஹிந்திரா (-5.83%), எம்&எம் (-4.27%), ஹெச்சிஎல் டெக் (-3.69%) நிறுவனங்கள் அதிகபட்ச சரிவை சந்தித்தன. குறிப்பாக, இன்போசிஸ், ஏர்டெல், டிசிஎஸ் பங்குகளின் விலை கணிசமாக குறைந்ததே சந்தையின் கடும் சரிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in