

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் நடவடிக்கைகளால் இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அதிபர் ட்ரம்ப் எடுத்த நடவடிக்கைகளில் இந்திய பங்குச்சந்தைகளில் 1,000-த்துக்கும் அதிகமான புள்ளிகள் இழப்பைச் சந்தித்துள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகள், வெளிநாடு முதலீட்டாளர்களின் ஆர்வமின்மை உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில தினங்களாக இந்திய பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி நிலவி வருகிறது.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 10) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 343.83 புள்ளிகள் சரிந்து 77,516.36 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி105.55 புள்ளிகள் சரிந்து உயர்ந்து 23,454.40 ஆக இருந்தது. வர்த்தக தொடக்கத்தில் இருந்தே கடும் வீழ்ச்சி நிலவி வருவது முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை நீட்டிக்கச் செய்துள்ளது. மாலையில் இந்திய பங்குச்சந்தைகளில் 1,000 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்தது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டாததன் எதிரொலியாக, இந்தியப் பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது 1,038 புள்ளிகள் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில், அமெரிக்கா இறக்குமதி செய்யும் அலுமினியம் மீதான வரியை 10லிருந்து 25% ஆக உயர்த்தி அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதுதான் பங்குச்சந்தைகளின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று தெரிகிறது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வரி விதிப்பு அறிவிப்புக்கு பிறகு, உலக நாடுகளின் நாணயங்கள் பல மதிப்பு குறைவது, தங்கம் விலை உயர்வவது போன்ற மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இரும்பு, அலுமினிய இறக்குமதிக்கு தலா 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படலாம் என அறிவிப்பு வெளியானது பங்குச்சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வெளிநாட்டு நிதி வெளியேற்றம் தொடர்வதாலும் பங்குச்சந்தை கடுமையான சரிவை சந்தித்துள்ளதாக தெரியவந்துள்ளது.