Published : 12 Jul 2018 08:24 AM
Last Updated : 12 Jul 2018 08:24 AM

அலுவலக இடத்துக்கான வாடகையில் 9-வது இடத்தில் டெல்லி கன்னாட் பிளேஸ்

புதுடெல்லியில் உள்ள கன்னாட் பிளேஸ் பகுதியில் அலுவலகத்துக்கான இடத்துக்கு மிக அதிக அளவில் வாடகை தர வேண்டியுள்ளது. அலுவலகம் அமைக்க அதிக செலவு பிடிக்கும் நகரங்கள் வரிசையில் 9-வது இடத்தில் கன்னாட் பிளேஸ் உள்ளது. இங்கு ஒரு சதுர அடிக்கு 153 டாலர் வாடகை செலுத்த வேண்டியிருப்பதாக சிபிஆர்இ ஆலோசனை மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மும்பையின் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் (பிகேசி) இந்த பட்டியலில் 26வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இங்கு ஒரு சதுர அடிக்கு 96.51 டாலர் வாடகை செலுத்தினால் போதுமானது. முந்தைய கணக்கெடுப்பில் இப்பகுதி 16-வது இடத்தில் இருந்தது.

அதேபோல மத்திய வர்த்தக பகுதியான நரிமன் பாயின்ட் தற்போது 37-வது இடத்தில் உள்ளது. இங்கு வாடகை 72.80 டாலராக உள்ளது. இப்பகுதி முன்னர் 30-வதுஇடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு 10-வது இடத்தில் இருந்த கன்னாட் பிளேஸ் பகுதி தற்போது 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

சிபிஆர்இ ஆலோசனை மையம் சர்வதேச அளவில் அலுவலக இடத்துக்கான வாடகை குறித்த பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. இதில் குறிப்பிட்ட தொகையானது வாடகை, உள்ளூர் வரி, சேவை வரி உள்ளிட்டவை சேர்ந்ததாகும்.

அலுவலகத்துக்கான இடம் பிடிப்பதில் டெல்லி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது என்று சிபிஆர்இ தலைவர் அஞ்சுமன் மாகசின் தெரிவித்துள்ளார்.

மும்பை பகுதி நிலவரம் வரும் மாதங்களில் அதிகரிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

இந்நிறுவனம் வெளியிட்ட பட்டியலில் ஹாங்காங் மையப்பகுதி முதலிடத்தில் உள்ளது. இங்கு ஒரு சதுர அடிக்கான வாடகை 306.57 டாலராக உள்ளது. இதற்கு அடுத்து லண்டன், பெய்ஜிங், சீனா, நியூயார்க் ஆகியவை உள்ளன.

சர்வதேச அளவில் அலுவல இடத்துக்கான வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு 2.4 சதவீத அளவுக்கு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x