காலணி, தோல் துறை மேம்பாட்டுக்கு சிறப்பு திட்டம்: மத்திய பட்ஜெட்

காலணி, தோல் துறை மேம்பாட்டுக்கு சிறப்பு திட்டம்: மத்திய பட்ஜெட்
Updated on
1 min read

காலணி, தோல் துறைகளை மேம்படுத்தும் வகையிலும் 22 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையிலும் மத்திய பட்ஜெட்டில் புதிய திட்ம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பட்ஜெட் உரையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் காலணி, தோல் துறையின் உற்பத்தித் திறன், தரம், போட்டித்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டம் 22 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும். ரூ. 4 லட்சம் கோடி வருவாய் ஈட்டும், ரூ. 1.1 லட்சம் கோடிக்கு மேல் ஏற்றுமதி வாய்ப்புகளை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உயர்தர காலணிகளை உற்பத்தி செய்வதற்கான சிறந்த இயந்திரங்கள் மற்றும் வடிவமைப்பு திறன் உருவாக்குதல் உள்ளிட்ட உற்பத்தி திறன்களின் வளர்ச்சிக்கு இத்திட்டம் ஆதரவாக இருக்கும். தோல் காலணிகள் மற்றும் தொடர்புடைய பொருட்களுடன் சேர்த்து, தோல் அல்லாத காலணிகளின் உற்பத்தியையும் மேம்படுத்துவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. தோல் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் நீல தோல் வகைகளுக்கு முழுமையான சுங்கவரி விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in