

உதான் திட்டத்தின் கீழ் இதுவரை 88 சிறிய விமான நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 619 வழித்தடங்களில் விமான போக்குவரத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நடுத்தர பிரிவு மக்கள் 1.5 கோடி பேர் விரைவான விமான போக்குவரத்து வசதியை பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் விமான போக்குவரத்து இணைப்பை மேலும் ஊக்குவிக்க மாற்றியமைக்கப்பட்ட உதான் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 120 புதிய இடங்களில் விமான போக்குவரத்து இணைப்பு ஏற்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் 4 கோடி பயணிகள் விமான பயணம் மேற்கொள்ள உதவும். இத்திட்டத்தின் மூலம் மலைப் பகுதிகள், வட கிழக்கு மாநிலங்களில் உள்ள மாவட்டங்களிலும் சிறு விமான நிலையங்கள் மற்றும் ஹெலிகாப்டர் தளங்கள் அமைக்கப்படும்.
பிஹாரில் கிரீன்பீல்டு விமான நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.