

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று (புதன்கிழமை) பவுனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.60,760 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.
அண்மைக்காலமாகவே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து, ஒரு பவுன் ரூ.60 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. இந்நிலையில், தங்கம் விலை இன்று மேலும் அதிகரித்தது. இதன்படி, கிராம் ஒன்றுக்கு ரூ.85 அதிகரித்து ஒரு கிராம் ரூ.7,595-க்கும், பவுனுக்கு ரூ.680 அதிகரித்து ஒரு பவுன் ரூ.60,760-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.104-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,04,000 ஆக உள்ளது.