எல்ஐசி மியூச்சுவல் ஃபண்டின் புதிய திட்டம் அறிமுகம்

எல்ஐசி மியூச்சுவல் ஃபண்டின் புதிய திட்டம் அறிமுகம்
Updated on
1 min read

சென்னை: நிறுவன பங்குகள், கடன் பத்திரம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யும் வகையில் பன்முக சொத்து ஒதுக்கீட்டு ஃபண்டை எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் அறிமுகம் செய்துள்ளது.

கடந்த 24-ம் தேதி தொடங்கிய இந்த புதிய திட்டம் பிப்ரவரி 7-ம் தேதி முடிவடைகிறது. இத்திட்டம் பிப்ரவரி 18-ம் தேதி முதலீட்டுக்காக மீண்டும் திறக்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் திரட்டப்படும் நிதியில் 65% நிப்டி 500 டி.ஆர்.ஐ., 25% நிப்டி கூட்டுக் கடன் இன்டெக்ஸ், 10% உள்நாட்டு தங்கத்தின் விலை ஆகியவற்றில் முதலீடு செய்யப்படும்.

இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.கே. ஜா கூறும்போது, "பன்முக சொத்து ஒதுக்கீட்டு திட்டங்கள் இப்போது பிரபலமாகி வருகின்றன. இது பங்குச்சந்தை அபாயங்களைக் குறைக்க உதவுகிறது. இந்திய மியூச்சுவல் ஃபண்ட் சங்கம் வெளியிட்ட தரவுகளின்படி, 2024 ஜனவரியில் ரூ.6.90 லட்சம் கோடியாக இருந்த கலப்பு மியூச்சுவல் ஃபண்ட்களின் சொத்து மதிப்பு, 2024 டிசம்பரில் ரூ.8.77 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது கலப்பு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மீது முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டுவதை பிரதிபலிக்கிறது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in