

மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் 6 ஆயிரம் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு மலேசிய ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் ஆள்குறைப்பு நடவடிக்கையை இந்நிறுவனம் எடுக்க முடிவு செய்துள்ளது.
மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அந்நாட்டின் கஸானா நேஷனல் நிதியத்துக்குச் சொந்த மானதாகும். இந்நிறுவனத்தில் அதிக பங்குகளைக் கொண்டுள்ள அந்நாட்டு கஸானா நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளில் 190 கோடி டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
அத்துடன் மொத்தமுள்ள 20 ஆயிரம் பணியாளர்களில் 30 சதவீதம் பேரை வீட்டுக்கு அனுப்பவும் முடிவு செய்யப்ப ட்டுள்ளது. மேலும் தேவை இல்லாத இடங்களை நிறுத்துவது உள்ளிட்ட பல மறு சீரமைப்பு பணிகளை செய்யவிருக்கிறது. பங்குச்சந்தையில் டீ-லிஸ்ட் செய்துவிட்டு, அடுத்த மூன்று ஆண்டுகளில் பங்குச் சந்தையில் பட்டியலிடும்போது கணிசமான லாபமீட்டும் நிறுவனமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அஜ்மன் மொக்தர் தெரிவித்தார்.
மேலும் இந்த நிறுவனத்துக்கு புதிய தலைமைச் செயல் அதிகாரியை நிறுவனம் தேடிக்கொண்டிருக்கிறது. மலேசிய நிதி அமைச்சகத்தின் ஆலோசனையுடன் இந்த ஆண்டு இறுதியில் புதிய சி.இ.ஓ. அறிவிக்கப்படுவார் என்று எதிர்பா ர்க்கப்படுகிறது. தொடர்ந்து ஆறு காலாண்டுகளாக நிறுவனம் நஷ்டத்தையே சந்தித்துவருகிறது. சமீபத்தில் இந்த நிறுவனத்தின் ஒரு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இன்னொரு விமானம் காணாமல் போனது.