தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 உயர்வு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 உயர்வு

Published on

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலையும் சற்றே உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. அதன்படி நேற்று குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது.

இன்று (டிச.21) காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,100-க்கும், பவுனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு பவுன் ரூ.56,800-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.99-க்கு விற்பனையாகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in