டெஸ்லா மதிப்புமிக்க நிறுவனமாக மாறினால் பில்கேட்ஸ் திவாலாகிவிடக்கூடும்: எலான் மஸ்க் கருத்து

டெஸ்லா மதிப்புமிக்க நிறுவனமாக மாறினால் பில்கேட்ஸ் திவாலாகிவிடக்கூடும்: எலான் மஸ்க் கருத்து
Updated on
1 min read

டெஸ்லா நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எதிராக பில்கேட்ஸ் முதலீடு செய்துள்ளார். மாறாக, டெஸ்லா உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக உருவெடுக்கும்பட்சத்தில் அது பிஸ்கேட்ஸை கூட திவாலாக்கி விடும் என்று எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார்.

டெஸ்ஸா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:

டெஸ்லாவுக்கு எதிராக பில்கேட்ஸ் ஷார்ட் பொசிஷனை அதிக அளவில் வைத்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பு டெஸ்லா நிறுவனத்தின் செயல்பாடு மோசமாக இருந்தபோது இந்த நிறுவனம் தேறாது என்பதன் அடிப்படையில் டெஸ்லாவுக்கு எதிராக அத்தகைய பெரிய முதலீட்டை பந்தயம் கட்டியிருந்தார்.

இந்த நிலையில், டெஸ்லா திவாலாகும்பட்சத்தில் அது அவருக்கு அதிக லாபத்தை அள்ளி வழங்கும். ஆனால், உலகின் முன்னணி நிறுவனமாக டெஸ்லா உருவெடுக்கும்பட்சத்தில் அது அவரை திவாலாக்ககூடும் . இவ்வாறு எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

டெஸ்லா நிறுவனத்தால் 1.5 பில்லியன் டாலரை இழந்ததாக கடந்த 2022-ம் ஆண்டு பில்கேட்ஸ் தெரிவித்திருந்தார். இதற்கு, எலான் மஸ்க் கடுமையான எதிர்வினையாற்றி இருந்தார். இதையடுத்து இருவருக்கும் இடையே பகைமையின் காரணமாக அவ்வப்போது மோதல் உருவானது. இந்த நிலையில், பில் கேட்ஸை பற்றியை எலான் மஸ்க்கின் இந்த சமூக வலைதள பதிவு மீண்டும் வைரலாகியுள்ளது.

ஆப்பிளின் சந்தை மதிப்பு 3.729 டிரில்லியன் டாலராக உள்ள நிலையில், டெஸ்லாவின் சந்தை மதிப்பு 1.251 டிரில்லியன் டாலராக இன்னும் பின்தங்கியே உள்ளது. முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்றால் டெஸ்லாவுக்கு 200 சதவீத வளர்ச்சியை தக்கவைக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in