Published : 06 Jul 2018 09:04 AM
Last Updated : 06 Jul 2018 09:04 AM

இவரை தெரியுமா?: க்ளோடில்ட் டெல்போஸ்

ரெனால்ட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி. 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்தப் பொறுப் பில் இருந்து வருகிறார்.

கான்ஸ்டெலியம் அலுமினிய பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் துணை தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் உடைய வர்.

ரியோ டின்டோ ஆல்கான், பெச்சினே போன்ற நிறுவனங்களின் நிதிப் பிரிவில் பணியாற்றியுள்ளார்.

பிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனத்தில் தணிக்கையாளராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.

கலிபோர்னியாவிலுள்ள கிங் பியரிங் நிறுவனத்தில் தணிக்கையாளராக தனது பணி வாழ்க்கையைத் தொடங்கியவர்.

பிரான்ஸை சேர்ந்த ஆர்சிஐ பேங்க் நிறுவனத்தின் இயக்குநர் குழு தலைவராக இருந்துவருகிறார்.

பிரான்ஸில் உள்ள எம்லியான் பிஸினஸ் ஸ்கூலில் மேலாண்மை பட்டம் பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x