Published : 29 Jul 2018 09:08 AM
Last Updated : 29 Jul 2018 09:08 AM

தனிநபர் தகவல்களை பாதுகாக்கும் வகையில் ஆதார் சட்டத்தில் மாற்றம் செய்யவேண்டும்: ஸ்ரீ கிருஷ்ணா குழு பரிந்துரை

தனிநபர் தகவல்களை பாதுகாக்கும் வகையில் ஆதார் சட்டத்தில் மாற்றம் செய்யப்படவேண்டும் என நீதிபதி sரிகிருஷ்ணா குழு பரிந்துரை செய்துள்ளது. யுஐடிஏஐ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட அரசு அதிகாரிகள் அல்லது அமைப்புகள் மட்டுமே தனிநபர் தகவல்களை அணுகும்வகையில் ஆதார் சட்டத்தில் திருத்தம் செய்யப்

படவேண்டும் எனவும் ஸ்ரீகிருஷ்ணா குழு கேட்டுக்கொண்டுள்ளது.

213 பக்கம் கொண்ட இந்த அறிக்கையை மத்திய அரசிடம் ஸ்ரீகிருஷ்ணா குழு சமர்ப்பித்துள்ளது. யுஐடிஏஐ அமைப்பு சுதந்திரமாக, தனித்தியங்கும் வகையில் செயல்படவேண்டும், தவறு செய்யும் அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் யுஐடிஏஐக்கு அளிக்கப்படவேண்டும் போன்ற கோரிக்கைகளையும் ஸ்ரீகிருஷ்ணா குழு பரிந்துரைத்துள்ளது. இது குறித்து அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

தனிநபர் தகவல்களைப் பாதுகாக்கும் வகையில் ஆதார் சட்டம் திருத்தப்படவேண்டும். யுஐடிஏஐ அமைப்பின் தன்னாட்சி அதிகாரம் உறுதிபடுத்தப்பட வேண்டும். தவறு செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக யுஐடிஏஐ நடவடிக்கை எடுக்கும் வகையில் தற்போதைய ஆதார் சட்டம் இல்லை. அவற்றில் மாற்றங்கள் செய்யப்படவேண்டும். நிறுவனங்கள் ஆதார் தகவல்களை தவறாக பயன்படுத்துவது, தகவல்களை வெளியிடுவது போன்றவற்றின் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தீர்வு காணப்படவேண்டும். வெர்ச்சுவல் ஐடி மற்றும் ஆஃப்லைன் சரிபார்ப்பு முறைகள் போன்றவற்றின் மூலம் தனிநபர் தகவல்கள் பெறப்படும் அளவு கட்டுப்படுத்தப்பட்டு தகவல்கள் பாதுகாக்கப்படும். ஆனால் இவை சரியான முறையில் எப்படி செயல்படத் தொடங்கும் என்பது தற்போதுவரை குழப்பமாகவே உள்ளது.

நிறுவனங்கள் ஆதார் தகவல்களை அணுகுவது கட்டுப்படுத்தப்படவேண்டும். 2 சூழ்நிலைகளில் ஆதார் தகவல்களை நிறுவனங்கள் அணுகலாம். முதலாவதாக, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி  தகவல்கள் கட்டாயமாக தேவைப்படுகின்றன என்ற நிலையில் நிறுவனங்கள் ஆதார் தகவலை அணுகலாம். இரண்டாவதாக யுஐடிஏஐ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட அரசு சார்ந்த செயல்பாடுகளைச் செய்யும் அரசு அதிகாரி இந்தத் தகவல்களை அணுகலாம். ஆனால் அரசு செயல்பாடு சார்ந்த செயல்களைச் செய்யாத நிறுவனங்கள் தனிநபர் தகவல்களை சரிபார்க்க ஆதார் தகவல்கள் தேவைப்பட்டால் ஆதாரை வைத்திருப்பவரின் ஒப்புதலோடு ஆஃப்லைன் முறையில் மட்டுமே தகவல்களை சரிபார்க்கவேண்டும். தற்பொழுது பெரும்பாலான நிறுவனங்கள் வெறுமனே தனிநபரின் ஆதார் எண்ணைக் கேட்கின்றன. இது மிக முக்கியமான பாதுகாப்பு பிரச்சினைகளை உருவாக்குகிறது.

யுஐடிஏஐ அமைப்பு தனித்து முடிவெடுக்கும் அதிகாரத்துடன் செயல்படவேண்டும் என ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x