அடுத்த ஆண்டில் பங்குச் சந்தைகள் உயரும்: கோடக் மஹிந்திரா சிஐஓ நம்பிக்கை

அடுத்த ஆண்டில் பங்குச் சந்தைகள் உயரும்: கோடக் மஹிந்திரா சிஐஓ நம்பிக்கை
Updated on
1 min read

முதலீட்டாளர்கள் மிதமான வருவாயை எதிர்பார்க்கும்பட்சத்தில் வரும் காலங்களில் பங்குச் சந்தை அதனை நிச்சயமாக நிறைவேற்றும் என்று கோடக் மஹிந்திராவின் தலைமை முதலீட்டு அதிகாரி (சிஐஓ) ஹர்ஷா உபத்யாயா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: இந்திய பங்குச் சந்தைகளில் தற்போதைய சரிவு தற்காலிகமானது. வரும் 2025-ம் ஆண்டில் பங்குச் சந்தைகள் படிப்படியாக முன்னோக்கிச் செல்லும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதிக வருவாயை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்கள் தங்களது இலக்குகளை குறைத்துக்கொள்ள வேண்டும். மூலதன செலவினம்- நுகர்வு அதிகரிப்பு, நிதி, தொழில்நுட்பம், மருத்துவம் ஆகிய ஐந்து முக்கிய கருப்பொருள்களில் அடுத்த ஆண்டில் பங்குச் சந்தையில் வளர்ச்சி வாய்ப்புகளை கோடக் எதிர்பார்க்கிறது.

தற்போதைய பங்குச் சந்தை நிலவரங்கள் லார்ஜ் கேப் பங்குகளில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு சிறந்த தருணமாக உள்ளது. எனவே, அவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி லார்ஜ் கேப் பண்டுகளில் தங்களது முதலீட்டு தொகுப்பை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

மிதமான வருவாயை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தை நிச்சயம் நல்ல பலனைக் கொடுக்கும். அடுத்த 4-5 ஆண்டுகளில் முதலீட்டாளர்களின் அடிப்படை எதிர்பார்ப்புகளை பங்குச் சந்தை பூர்த்தி செய்யும்.

இவ்வாறு ஹர்ஷா உபத்யாயா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in