

புதுடெல்லி: வரிதாரர்கள் வருமான வரி ரிட்டர்ன் (ஐடிஆர்) தாக்கல் செய்யும்போது, வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் வருமானம், வெளிநாடுகளில் உள்ள சொத்துகள் தொடர்பான விவரங்களை முழுமையாக தாக்கல் செய்ய வேண்டும்.
இந்நிலையில் இதுதொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம்தொடங்கியுள்ளது. இதன் ஒருபகுதி யாக, வெளிநாட்டில் சொத்துகள் கொண்டிருக்கும், வெளிநாடுகளில் இருந்து பெரிய ளவில் வருமானம் ஈட்டும் வரிதார்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு நினைவூட்டல் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-25 மதிப்பீட்டு ஆண்டுக்கு தாக்கல் செய்த வருமான வரி ரிட்டர்னில் வெளிநாட்டு சொத்து விவரங்களை முழுமையாக குறிப்பிடாத வரிதார்களுக்கு இந்தக் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.
தொழில்நுட்பம் மூலம் வரி செலுத்தும் நடவடிக்கையை எளிமைப்படுத்தும் நோக்கில் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரிக் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மேம்படுத்தும் முயற்சிகளை வருமான வரித் துறை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.